தமிழ், Colombo, Life quips

ஏமாந்தது போதும்‚ இனியும் ஏமாறாதே!

3110rajesh.jpg
தோட்டத் தொழிலாளியே நீயும் தமிழன்தான்
தமிழன் உலக ரீதியில் படைக்கும் சாதனை
உன்னை மட்டும் எட்டவில்லையே – ஏன்
தோட்டத்தில் இன்னுமேன் தவிக்கின்றாய்

நீ எப்போது இங்கு வந்து சேர்ந்தாயேர
அந்த நிலை இப்போது மாறியர விட்டது
நீ வாக்கு வங்கியானதுதான் உண்மை
சந்தர கொடுத்தும் சலிக்கவில்லையர நீ

உன் முதுகில் ஏறி சவாரி செய்து
நாடாளச் சென்றவர்கள் எங்கே
திரும்பிப் பார்த்தார்களர உன்னை
உனக்கு உறைக்கவர போகிறது

நீ அடிமையானது போதும் – உன்
வம்சத்தை வாழவைக்க வழி செய்
வரவைப் பெருக்கி கல்வியைத் தேடு
கல்லதார் கண்கள் புண்னென்பது தெரியாதர

உனது விடிவு அது கல்விதான்
உனது சொத்து அது கல்விதான்
உனது எதிர்காலம் அது கல்விதான்
உனது முன்னேற்றம் அது கல்விதான்

உன் பெயரைச் சொல்லி நிற்க
உன் வம்சத்துக்கு கல்வி கொடு
கல்வியே கருந்தனம் சளைக்காதே
உயரச் செய்து உயர்ந்து நில்

S.Rajasegar