தமிழ், Democracy, Peace and reconciliation

ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!

ஜனநாயகத்தின் வரைவிலக்கனங்களில் மிகப் பிரபல்யமானது அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் கூறிய “மக்களினால் மக்களுக்காக மக்ககளால் ஆளப்படும் ஆட்சி” என்பதே.
ஜனநாயகத்தில் நேரடி ஜனநாயகம் பிரதிநிதித்துவ ஜனநாயகம் எனும் இரு வகை காணப்பட்டது. கிறேக்க தேசத்தின் எதேன்ஸில் ஜனநாயகத்தின் ஆரம்பம் நேரடி ஜனநாயகம் ஆகும். மைதானத்தில் ஒன்றுகூடிய மக்களின் உயர்த்தப்படும் கைகளை கணக்கிட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. சனத்தொகை பெருக்கம்‚ வேறுபட்ட கருத்துகளின் தோற்றம்‚ மற்றும் ஆளும் நிலப்பரப்பின் பூகோல விரிவாக்கம் என்பன நேரடி ஜனநாயகம் வலுவிழந்து பிரதிநிதித்துவ ஜனநாயகமாக பரினமிக்க ஏதுவாக அமைந்தன. பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் நவீன நிலையாக “அரசியல் கட்சி்” எனும் அமைப்பு உள்ளது. வேறுபட்ட கொள்கைகளை உடையவர்களை பிரதிநிதித்துவப்படுத்த கட்சி எனும் அமைப்பு தோற்றம் பெற்றது. ஆனாலும் இன்றைய நிலையில் சாதி‚ இன‚ மத‚ மொழி என்ற ரீதியில் கருத்துக்களை முன்வைத்து‚ அதனடிப்படையில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த விளைவது சற்று சலிப்பான விடயம்.

தெரிவித்தல் – தெரிந்து கொள்ளல்

நடைமுறையில் பொதுவாக நோக்குகையில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் தாம் மேல் மட்டத்தில் எடுக்கும் தீர்மானங்கள்‚மற்றும் தமது கொள்கைகள்‚ நிலைப்பாடுகள் பற்றி பொதுமக்களுக்கு தெரியப்படுத்த பல்வேறு வழிமுறைகளை கையாள்கின்றன. அவற்றில் பிரதானமாக மூன்று முறைகளைக் குறிப்பிடலாம். முதலாவது மக்களை நேரடியாக சந்திக்கும் முறை‚ அதாவது கட்சிக்கூட்டங்கள்‚ மேடைப்பேச்சு‚ ஊர்வலங்கள்‚ நேரடி பிரசாரங்கள்‚ துண்டுப்பிரசுரங்கள் போன்றவை மூலம். அடுத்ததாக ஒலி‚ ஔிபரப்பு மற்றும் அச்சு ஊடகத்தின் ஊடாக‚ இதில் தொலைக்காட்சி மற்றும் வானொலி விவாதங்கள்‚ நேர்முகம்‚ கலந்துரையாடல்கள் மற்றும் கட்டுரைகள்‚ விளம்பரங்கள் போன்றவை அடங்கும். மற்றயது நவீன முறையான இன்றநெட் மூலம் இதில் கட்சியின் இணையத்தளம்‚ குழு ஈமெய்ல் போன்றவை அடங்கும். இத்துடன் ளுஆளு ஐயும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

இலங்கையை பொருத்தவரை இங்குள்ள அரசியல் கட்சிகள்‚ தகவல்கள் மேல் இருந்து கீழ் நோக்கி நகர போதுமான வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. மேற்கூறப்பட்ட நேரடி மற்றும் ஊடகம் உற்பட உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் உள்ளது போன்று தவகல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் அறியப்ப்பட்ட நவீன முறைகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. நவீன முறைகள் அதிகளவில் பயன்பாட்டில இல்லாவிட்டாலும் அவை சென்றடையும் சிறுதொகையினர் உள்ளனர் என்பதுடன் அத்தொகை சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டும் செல்கிறது. அதற்கேற்ப நவீன முறைளை கட்சிகளும் அதிகளவில் தமது பிரசாரத்திற்கு பயன்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இப்போதைக்கு இலங்கையின் இரு பிரதான கட்சிகள் உற்பட சில சிறிய கட்சிகளுக்கும் கட்சி இணையத்தளம் உள்ளது.

கட்சியின் மேல் இடத்தில் இருந்து தகவல் கீழ் நோக்கி நகர வேண்டியதன் முக்கியத்துவம் என்ன? தகவல் தெரியப்படுத்தப்படுவதன் மூலம் அக்கருத்துத் தொடர்பாக மக்கள் தூண்டப்படுவார்கள். தூண்டப்பட்ட கருத்திற்கு ஏற்ப செயற்பட மக்கள் தயார்நிலைப் படுத்தப்படுவர். உதாரணத்திற்கு‚ ஒரு கட்சி ஒரு விடயம் தொடர்பாக தனது கருத்தை ஏதேனும் முறையில் மக்களுக்கு தெரியப்படுத்தியதன் பின்னர் அக்கருத்து தொடர்பாக மக்கள் தூண்டப்படுவர்‚ அக்கருத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அக்கட்சி அழைப்பு விடுக்குமானால்‚ அக்கருத்துக்கு ஆதரவாக தூண்டப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்களாம். அல்லது முன்வைக்கப்பட்ட கருத்துக்கு ஆதரவாக தமது வாக்கினை அக்கட்சிக்கு வளங்குவார்கள் என்று எதிர்பார்க்களாம்.

இதன் மறுபக்கமான கீழ் இருந்து தகவல்கள் மேல் நோக்கி நகரும் முறையை பார்ப்போம்.
தமது கட்சியி்ன் சாதாரண உறுப்பினர்கள் உட்பட பொதுவாக பொது மக்கள் கொண்டுள்ள கருத்துகளை‚ அபிப்பிராயங்களை அறிந்து கொள்ள‚ கட்சி உறுப்பினர் கூட்டங்கள்‚ தகவல் பெட்டி‚ முறைப்பாடுகள்‚ கலந்துரையாடல் போன்ற சில எளிய பாரம்பரிய முறைகள் இப்போதைக்கு கட்சிகள் பயன்படுத்துகின்றன.

சாதாரண மக்களின் கருத்தை அல்லது அபிப்பிராயத்தை கட்சி மேலிடம் அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் என்ன என்று பார்ப்போம். கட்சி மேலிடம் எடுக்கும் தீர்மானங்கள் கீழ் நோக்கி நகர்த்தப்பட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு‚ தூண்டப்பட்டு‚ அதற்கு சார்பாக செயற்பட தயார்நிலைப் படுத்தப்பட வேண்டும். எனவே மக்கள் முன் கட்சி முன்வைக்கப் போகும் கருத்து மக்கள் ஏற்கனவே விரும்புகிற விதத்தில் இருந்தால் தூண்டப்படல்‚ செயற்பட தயார்நிலைப் படுத்தப்படல் என்பன மிகவும் எளிமையாக சாத்தியப்படும். மாறாக மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஏதேனும் ஒரு விடயத்தை முன்வைத்த பின்னர்‚ மக்கள் மறுதலிக்க‚ மக்களை திருப்திப்படுத்த சிரமப்பட வேண்டி ஏற்படும். அப்படியும் மக்கள் ஏற்கவில்லை எனின் கருத்துகளில் மாற்றங்கள் செய்ய நேரிடும். இவை நடைபெரும் காலப்பகுதியில் மாற்றுக் கட்சிகளின் விமர்சனத்திற்கு அகப்பட்டு கட்சியின் பிரபல்யம் குறையும்.

கட்சி முன்வைப்பது மக்கள் மறுதலிக்கும் வகையான தேர்தல் விஞ்ஞாபனம் எனின் கட்சியின் நிலைமை பற்றி கூறத்தேவையில்லை. திரும்ப அப்படியான ஒரு சந்தர்ப்பத்திற்கு அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும். மக்கள் அபிப்பிராயம் உள்வாங்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பது தெளிவு. எனவே கட்சியின் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல காட்டும் அக்கரையிலும் பார்க்க மக்களின் கருத்துகளுக்கு கட்சி காது கொடுப்பது அத்தியாவசியம். இங்கு தேர்தல் என்று குறிப்பிடப்படுவது ஜனநாயக ரீதியான தேர்தலையே. தேர்தலில் கள்ள வாக்கு போன்ற தேர்தல் வன்முறை அற்றதாக இருப்பது அவசியம்.

பிபர நொரிஸ்

“அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பாடலானது‚ பொதுவாக ஒருபக்க வழியாக கட்சியிடம் இருந்து மக்களை நோக்கியதாக காணப்படுகிறது. ஆயினும் ஜனநாயகத்தில் எவ்வாரேனும்‚ அரசியல் கட்சிகள்‚ கொள்கைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு உள்ள ஆர்வம்‚ அவர்கள் முக்கியத்துவம் காட்டும் விடயங்கள்‚ மற்றும் அரசியல் விருப்பு வெறுப்புகள் போன்றவற்றை அறிந்துகொள்வதில் கூடுதல் ஆர்வம் காட்டுவது ஆரோக்கியமானது” என்று‚ ஹவர்ட பல்கலைக்கழக அரசியல் விரிவுரையாளரும்‚ அரசியல் விஞ்ஞானியுமான பிபர நொரிஸ் குறிப்பிடுகிறார்.

தகவல் என்பது பலம் ஆகும் (ஐகெழசஅயவழை ெளை ீழறநச)

தகவல் தொழில் நுட்ப யுகம் என்று வர்ணிக்கப்படுகிற இன்று‚ அசுர வேகத்தில் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தின் துணையுடன்‚ தகவல்கள் மக்களை சென்றடையும் விதமும் வேகமும் அபார முன்னேற்றம் அடைந்துள்ளன. தொழில் நுட்பம் அவ்வளவு வளர்ச்சி காணாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது ஒரு பாரிய வளர்சிசியாகும். சில அரசியல் கட்சிகள் தமது கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இலத்திரனியல் ஊடகத்தை பெருமளவு பயன்படுத்துகின்றன. அச்சு ஊடகத்தை விட இலத்திரனியல் ஊடகம் மக்களை அதிகளவில் போய்ச் சேருகிறது. சில வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளை சில கட்சிகளின் ஊடகம் என்று எதிர்க்கட்சிகளால் குறிப்பிடப்படுவதும் உண்டு. மக்கள் விரும்பியேர விரும்பாமலேர பல்வேறு விதமான தகவல்களை அன்றாடம்‚ ஏன் கணத்துக்குக் கணம் பெற்றுக்கொண்ட வண்ணம் இருக்கிறார்கள். பெற்றுக்கொள்கிற தகவல்களுக்கு ஏற்ப மக்களின் அபிப்பிராயங்கள்‚ ஆர்வங்கள்‚ விருப்பு வெறுப்புகள் என்பன மாற்றம் அடைகின்றன. இந்த மாற்றத்தினால் தங்களுக்கு ஏற்படப்போகும் பாதகமான மற்றும் சாதகமான தாக்கத்தை அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்வது தவிர்க்க முடியாதது.

ஜனநாயகத்திற்கு உண்மையாக மதிப்பளிக்கும் அரசியல் கட்சிகள் தமது தீர்மானங்களில் மக்கள் அபிப்பிராயத்திற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டியது அதிமுக்கியம். மக்கள் அபிப்பிராயத்திற்கு மதிப்பளிக்கும் அரசியல் கட்சியின் இருப்பு (நுஒளைவநஉெந) கேள்விக்கிடமின்றி உறுதிப்படுத்தப்படும். மக்கள் அபிப்பிராயத்திற்கு மதிப்பளிப்பதற்கு முதல் மக்கள் அபிப்பிராயம் என்ன என்று தெரித்து கொள்ள வேண்டாமா?

அபிப்பிராய ஆய்வு

எவ்வாறு மக்கள் அபிப்பிராயத்தை தெரிந்துகொள்வது? ஏற்கனவே வேறுபட்ட அளவுகளில் பாரம்பரிய முறைகள் பயன்பாட்டில் உள்ளன. தகவல் தொழிநுட்பத்தின் நேரடி மற்றும் மறைமுகமான தாக்கத்தின் காரணமாக மக்களின் அபிராயங்களில் ஏற்படும் மாற்றங்களை இந்த பாரம்பரிய முறைகளில் எவ்வளவு தூரம் துள்ளியமாக இனங்கண்டு கொள்ளலாம் என்பது சந்தேகத்துக்குரியது. மக்களின் அபிப்பிராயம் என்ன‚ அது எந்த திசையை நோக்கி அசைகிறது என்பவற்றை (வெவ்வேறு மட்டங்களில்‚ அம்மட்டங்களுக்குரிய வலுக்களுடன்) அறிந்து கொள்ள தற்போதுள்ள சிறந்த முறையாக “அபிப்பிராய ஆய்வு” என்பதை குறிப்பிடலாம். இது பல்வேறு அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. அபிப்பிராய ஆய்வினை மிக எளிமையாக விளக்குவதானால்‚ “ஒரு பாணை சோறுக்கு ஒரு சோறு பதம்” எனும் தமிழர் பலமொழியை கூறலாம். வைத்தியர் எமது இரத்தத்தை பரிசோதிக்க ஒரு சில துளிகளை எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்துவது போல‚ ஒரு குறிப்பிட்ட அளவு மக்களை விஞ்ஞான ரீதியில் எழுமாராக தெரிவு செய்து ஆய்வுக்குட்படுத்தி மொத்த மக்களின் அபிப்பிராயத்தை அறித்து கொள்ளும் ஒரு முறையே இது. அரசியல் கட்சிகள் தீர்மானங்கள் எடுக்கும் போது அபிப்பிராய ஆய்வின் முடிவுகளை கருத்தில் கொள்ளுமாயின் அவை ஜனநாயகத்திற்கு மதிப்பளிப்பதாக கொள்ளலாம்.

இதுவரை அரசியல் கட்சி என்று குறிப்பிட்டதில் அரசும் உள்ளடக்கம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு ஜனநாயக அரசு எடுக்கும் தீர்மானங்கள் மக்கள் ஆமோதிப்பதாக இருத்தல் அவசியம். மக்கள் விரும்பாத தீர்மானங்களை மக்கள் மீது திணிக்கலாம். மக்கள் ஏற்றுக்கொள்ளாத சட்டங்களை நிறைவேற்றலாம். மக்கள் வெறுக்கும் வரிகளை மக்கள் மீது சுமத்தலாம். ஆனால் இவ்வாறான மக்கள் விருப்புக்கு மாறான நடவடிக்கைகள் நிலைத்திருக்காது. எடுக்கின்ற தீர்மானங்கள் நிலைக்க வேண்டும் எனின் அது மக்கள் ஆதரிக்கும் தீர்மானமாக இருப்பது இன்றியமையாதது. தீர்மானத்திற்கு மட்டும் அல்ல ஆட்சியில் உள்ள அரசுக்கும் இது பொருந்தும்.

மாரிமுத்து கிருஷ்ணமூர்த்தி