தமிழ், Democracy, Governance

மக்கள் விடுதலை முன்னணியும் மாகாண சபை அதிகாரங்களும்

சமீபத்தில்‚ தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்கு யோசனைகளை முன்வைக்க என்று அமைக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவினரால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் 13வது திருத்தச்சட்டத்தை அடிப்படையாக கொண்டதாக அமைந்திருந்தது தெரிந்ததே. 13வது திருத்தச்சட்டம் 1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையின் கொண்டு வரப்பட்டது. கிட்டத்தட்ட 30 வருட பிரச்சினைக்கு 20 வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாமல் கிடந்த திருத்தச்சட்டமாகும். இதனையே முழுமையாக நடைமுறைப்படுத்தப் போவதாக அரச தரப்பு தெரிவிக்கிறது. இச்சட்டத்தின் அடிப்படையில் அமையும் சர்வகட்சி பிரதிநிதித்துவ குழுவின் விரிவான கருத்தொருமிப்பு ஆவணம் விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளதாக தெரிவித்திருந்தது.

அரசாங்கத்தின் பங்காளிகளான ஜாதிக ஹெல உருமய மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் இரண்டும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளையும் (வுஆஏீ) சர்வகட்சி பிரதிநிதித்துவ குழுவில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

அண்மையில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ‚ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கலந்துரையாடிய போது 13வது திருத்தச்சட்டத்தை செயற்படுத்துவதற்கு முழுமையான ஆதரவை தாம் வழங்குவதாக தெரிவித்திருந்தார். சர்வகட்சி பிரதிநிதித்துவ குழுவில் எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இடம் பெறவில்லை என்பது தெரிந்ததே.

ஆனால் மக்கள் விடுதலை முன்னணி‚ 13வது திருத்தச்சட்டத்தினை செயற்படுத்த தாம் ஒருபோதும் இடம் கொடுக்கப்பபோவதில்லை என அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் சர்வ கட்சி பிரதிநிதித்துவ குழுவில் மக்கள் விடுதலை முன்னணியும் அங்கம் வகித்தாலும்‚ அதில் இருந்து விலகிய பின்னர் இக் குழுவை கலைத்து விட வேண்டும் என்று கருத்து தெரிவித்து வந்தாலும் சர்வ கட்சி பிரதிநிதித்துவ குழுவின் யோசனைகள் வெளியிடப்பட்டதன் பின்னர் அக்குழு மற்றும் அதன் யோசனைகளை மக்கள் விடுதலை முன்னணி கடுமையாக எதிர்த்து வருகின்றமை தெரிந்ததே.

அது மட்டுமன்றி கூடவே இந்தியாவையும் விமர்சனம் செய்கிறது. இதற்கு சீனாவுக்கும் மக்கள் விடுதலை முன்னணியிற்குமான உறவு மிகுந்த செல்வாக்கு செலுத்தினாலும் வெளியில் கூறப்படுகின்ற காரணங்கள் வேறு விதமானவை. 1987ல் எமது படையினர் வடமராட்சி போரில் வெற்றியடைய இருக்கையில்‚ இந்தியர தலையிட்டு ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனாவை பணிய வைத்து செய்த இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் எமது நாட்டிற்கு பிரிவினைவாதத்தை அறிமுகப்படுத்தியது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த பின்னணியிலேயே 13வது திருத்தச்சட்டத்தை செயற்படுத்துமாறு அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

13வது திருத்தச்சட்டத்தை தாம் எதிர்க்கின்றமைக்கு மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கும் காரணிகளில்‚ பிரிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மீளவும் இணைக்கப்படும் சாத்தியங்கள் உள்ளது மற்றும் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குதல் போன்ற விடயங்களையும் முக்கியமாக சில காரணிகளாக குறிப்பிடுகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் சில வருடங்களுக்கு முன்னர்‚ வடக்கு கிழக்கு மாகாணங்களின் இனைப்பு மற்றும் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குதல் போன்ற விடயங்கள் மற்றும் வேறு சில விடயங்களில் அதிகாரங்களை பகிர்ந்து கொள்கின்றமை தொடர்பாக மக்களின் அபிப்பிராயங்கள் எப்படி இருந்தது என மீட்டிப் பார்ப்பது பொருத்தமாக அமையும் என நம்புகிறோம். மக்கள் அபிப்பிராயங்கள் பொதுவாக காலத்தோடு மாறுபடும். இந்த மாற்றத்திற்கு பல்வேறு அக மற்றும் புற காரணிகள் செல்வாக்கு செலுத்தும். சில அபிப்பிராயங்களில் மாற்றம் ஏற்பட நீண்ட காலம் எடுக்கும்‚ சில அபிப்பிராயங்கள் குறுகிய காலத்தில் மாற்றம் அடையும். அரசியல்‚ பொருளாதாரம்‚ பாதுகாப்பு‚ மற்றும் இன்னோரன்ன வகையில் தற்போதைய நிலைமையில் இவை காலாவதியான தரவுகளாக‚ இறந்த கால அபிப்பிராயங்களாக இருந்தாலும்‚ அப்போதைய நிலைமையில் மக்களின் அபிப்பிராயங்கள் என்னவாக இருந்தது என்கிற விடயம் பெறுமதிவாய்ந்தது.

2006ம் ஆண்டு ஜூலை மாதம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு எதிராக உயர் நீதி மன்றில் தாக்கல் செய்திருந்தது. 2006 ஒக்டோபரில் உயர் நீதி மன்றம் வடக்கு‚ கிழக்கு மாகாணத்தை இணைத்தமை செல்லுபடியற்றது என தீர்ப்பு வழங்கியது. இக்காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திடம் முன்வைத்த தனது 20 யோசனைகளில் ‘வடக்கு‚ கிழக்கு மாகாணத்தை பிரித்தல்’ என்பது ஒரு யோசனையாக இருந்தது. மேலும் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்து‚ சமாதான செயற்பாடுகளுக்கு உதவுவதில் இருந்து நோர்வேயை அகற்றுதல்‚ அமைச்சரவை உறுப்பினர் எண்ணிக்கையை 30 க்கு குறைத்தல் போன்றவையும் அடங்கியிருந்தன.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கருத்துக் கணிப்புப் பிரிவான சோஷல் இன்டிகேட்டரினால் 2006 ஆண்டு் நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட ‘சமாதான நம்பிக்கைச் சுட்டி’ ஆய்வின் முடிவுகளில் மக்கள் விடுதலை முன்னணியினரால் முன்வைக்கப்பட்ட ‘வடக்கு‚ கிழக்கு மாகாணத்தை பிரித்தல்’ எனும் யோசனையை 29 சதவீதமான சிங்கள சமூகத்தவர்கள் ஆதரிப்பதாக தெரிவித்திருந்தனர். 49 சதவீதமான சிங்கள சமூகத்தவர்கள் எந்த அபிப்பிராயமும் தெரிவிக்கவில்லை.

மற்றைய யோசனைகளான யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்தல்‚ சமாதான செயற்பாடுகளுக்கு உதவுவதில் இருந்து நோர்வேயை அகற்றுதல் என்பவற்றை ஆதரித்த சிங்கள சமூகத்தவர்களின் சதவீதங்கள் முறையே 27‚ 47 ஆகும். அன்று மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்த இந்த யோசனைகள் இன்று நிறைவேற்றப்பட்டு விட்டன. இன்னும் சிறைவேற்றப்படாத அமைச்சரவை உறுப்பினர் எண்ணிக்கையை 30 க்கு குறைத்தல் எனும் யோசனையை அன்று ஆதரித்த சிங்கள சமூகத்தவர்களின் சதவீதம் 62 ஆகும்.

2003 ஜூன் மாதம் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கருத்துக் கணிப்புப் பிரிவான சோஷல் இன்டிகேட்டரினால் சமாதான செயற்பாடு தொடர்பிலான அறிவு‚ மனோநிலை‚ மற்றும் பழக்கங்கள் பற்றிய அளவீடு (முழெறடநனபந யுவவவைரனந யனெ ீசயஉவஉைநள ளுரசஎநல) ஒன்று நடாத்தப்பட்டு முடிவுகள் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டது.

13வது திருத்தச்சட்டத்திற்கு அமைய மாகாணங்களுக்கு அதிகபட்ச அதிகார பரவலாக்கத்தை அனுமதிக் தேவையான நடவடிக்கை எடுக்க சர்வகட்சி பிரதிநிதித்துவ குழு யோசனை தெரிவித்துள்ளது. இதற்கமைய மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குதல் பற்றியும் மக்கள் விடுதலை முன்னணி அச்சம் கொண்டுள்ளது.

2003 இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்த காலம். இரு தரப்பும் சமாதான போச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்தது. இலங்கையில் சமாதானம் மற்றும் அரசியல் இனக்கப்பாடு தொடர்பில் ஆற்றுப்படுத்தவும் தீர்மானங்களை எடுக்கும் முயற்சிகளுக்கும் அறிவு‚ மனோநிலை‚ மற்றும் பழக்கங்கள் பற்றிய அளவீட்டு முடிவுகள் உறுதுணையாக அமையும் என்ற நோக்கமாகவே இவ் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இக் காலகட்டத்திலும் சமாதான உடன்பாட்டின் ஒரு பகுதியாக மத்திய அரசுக்குக்கும் பிராந்திய ஆட்சி அதிகார சபைக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக அதிகம் பேசப்பட்டது. பொலிஸ் அதிகாரங்கள் அதிகம் இருக்க வேண்டியது மத்திய அரசிடமர அல்லது பிராந்திய ஆட்சி அதிகார சபையிடமர என்று கேட்டபோது‚ சிங்கள மக்களின் நான்கில் ஒரு பகுதியினர் பொலிஸ் அதிகாரங்கள் பிராந்திய ஆட்சி அதிகார சபைக்கு வழங்கப்படுவதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் 63 சதவீதமான தமிழர்களும் 43 சதவீதமான முஸ்லிம்களும் பிராந்திய ஆட்சி அதிகார சபைக்கு வழங்கப்படுவதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர்.

அதே போன்று இராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்பு‚ வெளிநாட்டுக் கொள்கை‚ நீதிமன்றம் மற்றும் நீதித்துறை‚ ஆகிய விடயங்கள் தொடர்பிலான ஆதிகாரம் பிராந்திய ஆட்சி அதிகார சபைக்கு வழங்கப்படுவதற்கு சிங்கள மக்களின் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பகுதியினர் ஆதரவாகவே கருத்து தெரிவிதிருந்தனர். இக்கருத்தை மூன்றில் இரண்டு தமிழர்களும் ஐந்தில் இரண்டு முஸ்லிம்களும் கொண்டிருந்தனர்.

அரைவாசிக்கு மேற்பட்ட சிங்கள மக்கள் போக்குவரத்து‚ கலாச்சார மற்றும் சமய விவகாரங்கள்‚ விவசாய மற்றும் மீன் பிடி மற்றும் பாடசாலை மற்றும் கல்வி போன்ற விடயங்களின் அதிராரங்கள் பிராந்திய ஆட்சி அதிகார சபைக்கு வழங்கப்படுவதை ஆதரிப்பதாக தெரிவித்திருந்தனர். இக்கருத்தை ஐந்தில் நான்கு தமிழர்களும் மூன்றில் இரண்டு முஸ்லிம்களும் வெளியிடிருந்தனர்.

2003 ஜூன் இந்த ஆய்வு நடாத்தப்பட்ட போது முழுமையான சமாதானமான சூழ்நிலை இருந்தது என்று கூற முடியாவிட்டாலும் அப்போது இருந்த சூழ்நிலையும் இப்போது உள்ள சூழ்நிலையும் நேர் எதிரானவை என்று சொல்லலாம். இந்த நிலைமையில் மக்கள் அபிப்பிராயம் எப்படி மாறியிருக்கும் என்று துள்ளியமாக எதிர்வு கூற முடியாவிட்டாலும்‚ தென் இலங்கையின் பெரும்பாலான சிங்கள மக்களின் நிலைப்பாடு‚ மக்கள் விடுதலை முன்னணியில் நிலைப்பாடாவவே இருக்கும்.

மாரிமுத்து கிருஷ்ணமூர்த்தி.

14.03.2008