Archive for தமிழ்
January 9, 2008 at 9:04 am · Categories: Districts, Colombo, සිංහල, தமிழ், English, Media | by Vikalpa Admin

Vikalpa, Sri Lanka’s only citizen journalism initiative working primarily in Sinhala and Tamil, is pleased to announce the official launch of the Vikalpa YouTube video channel.
Our YouTube channel complements the text on this website and currently features over 50 short videos on human rights, peace, war, media freedom, gender and politics in Sri Lanka.
Videos on the Vikalpa YouTube channel have already generated hundreds of views, with a few generating views in the thousands. For example, a video (in Sinhala) on a human rights activist’s trip to and experiences in the embattled Jaffna peninsula in the North of Sri Lanka, viewed over 4,000 times, propelled the channel into #82 of the top 100 list …
January 4, 2008 at 10:00 am · Categories: Peace and reconciliation, Colombo, සිංහල, தமிழ், English, Democracy, Media, Human Rights, Human Security | by Vikalpa Admin
Vikalpa captured scenes from the assassinated UNP MP T. Maheswaran’s funeral held In Colombo on 3rd January 2008.
December 20, 2007 at 11:30 am · Categories: தமிழ், Gampaha, Governance | by Vikalpa_N
உலக மீனவர் தினத்தையிட்டு தேசிய மீனவ ஒத்துழைப்புப் பேரவையும் உலக மீனவ மக்கள் சம்மேளனமும் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் எதிர்ப்புப் பேரணியும்‚ எதிர்ப்புக் கூட்டமும் 28-11-2007 அன்று நீர்கொழும்பில் நடைபெற்றது. இதில்‚ ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
உலக மீனவ தின வைபவத்தை நடத்தி விவசாய‚ மீனவ‚ தொழிலாளர்‚ தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தைப் பலப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் எதிர்ப்புப் பேரணியும் கூட்டமும் நடைபெற்றது.
வடக்கு தவிர்த்து நாட்டின் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஊடக அடக்குமுறைக்கான இயக்கம் கலந்துகொண்டு ஊடக அடக்குமுறைக்கு எதிராக எதிர்ப்புக் கோஷம் எழுப்பியவாறு சென்றமை குறிப்பிடத்தக்கது. இதில் நாட்டின் அனைத்து பாகங்களிலும் இருந்து வந்த ஊடகவியலாளர்களும் பிரதேச ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.
எதிர்ப்புப் பேரணியிலும் கூட்டத்திலும் நீர்கொழும்பு ஸ்ரீ விமுக்தி மீனவ பெண்கள் அமைப்பு (கடோல்கலே)‚ ஸ்ரீ லங்கர மீனவ பெண்கள் அமைப்பு (பிடிப்பனை)‚ நன்னீர் மீனவ கூட்டுறவுச் சங்கம் (அங்கமுவ)‚ பிரஜர சக்தி அபிவிருத்தி மன்றம் (கருவலகஸ்வேவ)‚ சூரியகாந்தி சங்கம் (திருகோணமலை)‚ தென் மாகாண மீனவர் சங்கம் (மாத்தறை)‚ லூர்மாதர மீனவர் சங்கம் …
December 11, 2007 at 4:48 pm · Categories: தமிழ், Governance, Democracy | by Vikalpa_N
வரவு – செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பு 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. அரசு வெற்றிபெறும் என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டேர புள்ளே மார் தட்டுகிறார். அரசை தோற்கடித்தே தீருவோம் என்று ஐ.தே.கட்சி சவால் விடுகின்றது.
இந்த நிலையில் வரவு – செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் அமைச்சர் சந்திரசேகரன் மலேஷியர செல்கின்றார். பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்ற நிலைதான் இது என பலரும் விமர்சிக்கின்றனர். ஐ.தே.கட்சியையும் அரசையும் குறிப்பாக தமிழ் மக்களையும் பகைத்துக்கொள்ளாமலிருக்க இதுதான் வழயென அமைச்சர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். கடந்த முதலாம் இரண்டாம் திகதிகளில் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் தமிழ் இளைஞர்கள் வகைதொகையின்றி கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்தொகையானோர் மலையகத்தைச் சேர்ந்தவர்களாவர். இந்தக் கைது தொடர்பாக மலையக மக்கள் முன்னணி பெரிதாக அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் தமது அமைச்சுப் பதவி பறிபோய்விடலாமென மலையக மக்கள் முன்னணி அமைச்சர்கள் நினைத்திருக்கலாம்.
ஏதேர கழுவிய மீன்களில் நழுவிய மீன்போல் செயற்படாமல் மலையக அரசியல்வாதிகள் தமக்கு வாக்களித்த மக்களின் நலன்கருதிச் செயற்பட உறுதி பூணவேண்டும்.
சியாமளர …
December 11, 2007 at 4:37 pm · Categories: Peace and reconciliation, தமிழ், Democracy, Human Rights, Human Security | by Vikalpa_N
நுகேகொட குண்டு வெடிப்பை அடுத்து கொழும்பிலும் அதை அண்மித்த பிரதேசங்களிலும் இம்மாதம் முதலாம் இரண்டாம் திகதிகளில் பொலிஸாரும் முப்படையினரும் நடத்திய தேடுதல் வேட்டையில் வகைதொகையின்றி தமிழர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இத்தேடுதல் நடவடிக்கையின்போது அடையாள அட்டை மற்றும் பொலிஸ் பதிவு இருந்த நிலையில் ஏராளமான அப்பாவி தமிழ் இளைஞர்கள் அடாவடித்தனமாக கைதுசெய்யப்பட்டனர். இவ்வாறு மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கைதாகினர். ஒருவாரம் கடந்த நிலையில் பலர் விடுவிக்கப்பட்டு 463 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என நேற்று (டிசம்பர் 10) உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு தமிழ் இளைஞர் யுவதிகள் வகை தொகையாக கைதுசெய்யப்பட்டதை எதிர்த்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தது.
இ.தொ.கா. தொடர்ந்த வழக்கு நேற்று (டிசம்பர் 10ஆம் திகதி) விசாரணைக்கு வந்தபோதே சட்டமர அதிபர் திணைக்களம் 463 பேர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் இவர்களில் 102 பேர் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தது. எஞ்சிய 361 பேர் பொலிஸ் நிலையங்களில் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் விளக்கமளித்தது.
பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 361 பேரை உடனடியாக நீதிமன்றங்களில் ஆஜர்செய்து பிணையில் விடுவிக்க …
October 31, 2007 at 2:15 pm · Categories: Colombo, தமிழ், Life quips | by Vikalpa_R

தோட்டத் தொழிலாளியே நீயும் தமிழன்தான்
தமிழன் உலக ரீதியில் படைக்கும் சாதனை
உன்னை மட்டும் எட்டவில்லையே – ஏன்
தோட்டத்தில் இன்னுமேன் தவிக்கின்றாய்
நீ எப்போது இங்கு வந்து சேர்ந்தாயேர
அந்த நிலை இப்போது மாறியர விட்டது
நீ வாக்கு வங்கியானதுதான் உண்மை
சந்தர கொடுத்தும் சலிக்கவில்லையர நீ
உன் முதுகில் ஏறி சவாரி செய்து
நாடாளச் சென்றவர்கள் எங்கே
திரும்பிப் பார்த்தார்களர உன்னை
உனக்கு உறைக்கவர போகிறது
நீ அடிமையானது போதும் - உன்
வம்சத்தை வாழவைக்க வழி செய்
வரவைப் பெருக்கி கல்வியைத் தேடு
கல்லதார் கண்கள் புண்னென்பது தெரியாதர
உனது விடிவு அது கல்விதான்
உனது சொத்து அது கல்விதான்
உனது எதிர்காலம் அது கல்விதான்
உனது முன்னேற்றம் அது கல்விதான்
உன் பெயரைச் சொல்லி நிற்க
உன் வம்சத்துக்கு கல்வி கொடு
கல்வியே கருந்தனம் சளைக்காதே
உயரச் செய்து உயர்ந்து நில்
S.Rajasegar
…
October 30, 2007 at 11:43 am · Categories: Colombo, தமிழ், Education | by Vikalpa_N

நமது சமயங்கள் தோன்றப்பெற்றது தொட்டு எமக்கென்று ஒரு கலாசாரம் பிறந்தது. இந்து‚ பெளத்தம்‚ கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதத்தினரும் வாழும் இந்த இலங்கை நாட்டில் அந்தந்த மதத்தவரின் கலாசாரங்கள் தற்போது - இந்த நவீன காலத்தில் பின்பற்றப்படுகின்றனவா? ஓவ்வொரு மதம் சார்பிலும் பல்வேறு கோட்பாடுகள்‚ சம்பிரதாயங்கள்‚ சாஸ்திரங்கள் வகுக்கப்பட்டே இருக்கின்றன. இவை யாவும் மக்களால் கடைபிடிக்கப்படுகிறதா?
சுரி….. வகுக்கப்பட்டிருக்கும் கலாசாரத்தை அப்படியே பின்பற்றாவிட்டாலும் ஓரளவாவது எதற்காக‚ யாருக்காக என்று சற்று சிந்தித்துப் பார்க்கலாம் அல்லவா. நாம் வரம்பு மீறுகின்றோமா?‚ நாம் செய்வது சரியர என்று கூட சிந்தித்துப் பார்க்கலாம்தானே?
கலாசாரம் தற்போது எவ்வாறு பேணப்பட்டு வருகிறது என்பதற்கு சிறந்த சான்றாக அண்மையில் கொழும்பில் ஒரு நிகழ்வொன்று இடம்பெற்றிருக்கின்றது.
கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றின் நிகழ்வு (பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபம்) இதுவாகும். அந்த நிகழ்ச்சியின் சில படங்களையே நீங்கள் மேலே காண்கிறீர்கள். எப்படி? எமது கலாசாரம் பார்த்தீர்களா? இதில் இந்து‚ பெளத்தம்‚ கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதத்தினரும் இருக்கின்றனர். இவர்களின் ஆட்டமும் பாட்டமும் கவர்ச்சியான உடையும் செயற்பாடுகளும் பார்த்தவுடன் என்ன தோனுகிறது. …
October 26, 2007 at 1:36 pm · Categories: தமிழ், Human Rights | by Vikalpa_N
பெண்களுக்கு எங்கு சென்றாலும் நிம்மதியில்லை‚ தொல்லை… தொல்லை…. அதுவும் இந்தக் காலத்தில் சொல்லவே தேவையில்லை. பாதையில்‚ வேலை செய்யும் இடத்தில்‚ பஸ்ஸில் என்று கூறிக்கொண்டே போகலாம். கூடுதலாக இவர்கள் காமவெறியர்களின் தொல்லைக்கே உட்படுகின்றனர். அதுவும் வயதான காமவெறியர்களின்.
நான் தற்போது எனது நண்பனின் அக்காவுக்கு நேர்ந்த சம்பவமொன்றைக் கூறுகிறேன். அவர் (அக்கா) சிங்கள வார இதழ் பத்திரிகையொன்றில் கணினி இயக்குநராகப் பணிபுரிகின்றார். கொழும்பு புறக்கோட்டையிலிருந்து அலுவலம் இருக்கும் மஹரகமவுக்கு செல்வதற்காக பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தார்.
இவர் சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் பெரும்பான்மையினரான சிங்களவர்களே கூடுதலாக இருந்தனர். நண்பனின் அக்கர மட்டுமே தமிழ். திருமணம் முடித்தவர். நெற்றியில் பொட்டும் வைத்திருந்துள்ளார். இவர் பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தவேளை அவரின் இடுப்புப் பகுதியில் கையொன்று உரசுவது போன்று உணர்ந்துள்ளார். முதலில் தனது கைதான் பட்டிருக்கும் என்று இருக்க மீண்டும் அவ்வாறான ஒரு நிலையையே உணர்ந்திருக்கிறார்.
இருப்பினும்‚ மீண்டும் அவர் அலட்சியப்படுத்த மூன்றாவது தடவையாக பின் அமர்விலிருந்து ஒரு கை தனது இடுப்புப் பகுதியை நோக்கி வருவதைக் கண்டுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் பின் அமர்வை பார்த்தபோது தனியாக சற்று வயதான ஒருவர் தூங்கிக்கொண்டிருப்பதை (தூங்கிக்கொண்டிருப்பதைப் போல) …
« Previous entries ·
Next entries »