සිංහල, Colombo, Life quips, Transport

பயணிகள் சட்டம் கை கொடுக்குமா?

சட்டம்‚ ஒழுங்கு என்பது நம் நாட்டைப் பொருத்தவரை சுனாமி போல எப்போதாவது வந்து மறைந்துவிடுகின்ற ஒன்றாகவே உள்ளது‚ என்றே எண்ணத் தோன்றுகின்றது. இப்படி நான் கூறுவதற்கு அண்மையில் நடந்த சம்பவமே காரணம். சம்பவம் என்னவேர வழமையானது தான். இருந்தாலும் அன்றைய தினம் சம்பவத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது மட்டுமல்லாது‚ எம்மை கோபத்திற்கும் ஆளாக்கியது.
இதற்கு மேல் புதிர் போடாமல் நேரடியாக சம்பவத்திற்கு வருகிறேன். 03.10.2008 வெள்ளிக்கிழமை அன்று காலை நானும் எனது தங்கையும் வழமைபோல பம்பலப்பிட்டி கதிரேசன் கோயிலுக்குச் சென்று வழிபாடுகளை முடித்துக்கொண்டு காரியாலயத்திற்கு செல்வதற்காக கோயிலுக்கு எதிரே உள்ள பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்தோம். அப்போது வந்த 154‚ கிரிபத்கொடை (பஸ் இலக்கம் : துது-7351) பஸ்ஸில் இருவரும் ஏறினோம். ஏறி அமர்ந்து 5 நிமிடத்திற்கும் மேலாகியது. பஸ்‚ தரிப்பிடத்தை விட்டு நகருவதாக இல்லை. நாங்கள் சரியாக 9.10 இற்கு பஸ்ஸில் ஏறினோம். பிறகு ஒருவாராக ஆமை வேகத்தில் பஸ் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. பின் அடுத்த பஸ் தரிப்பிடத்திலும் அப்படியே தான். அங்கும் 5 நிமிடம் நிறுத்தி வைத்திருந்ததோடு மட்டுமல்லாது அதற்கு அடுத்து வந்த இரு பஸ் தரிப்பிடங்களிலுமே இதே போல் நிறுத்தி வைத்திருந்தனர்.
நானும் தங்கையும் பஸ் நடத்துனருக்கு நேரடியாக எதுவும் சொல்ல முடியாது எங்களுக்குள் ஏசிக்கொண்டு வந்தோம். அப்போது நான் தங்கையிடம் கேட்டேன்‚ இது போன்ற சம்பவங்களை முறையிட்டு அவற்றுக்கு முடிவு கட்டுவதற்கு ஏதும் வழியிருக்கிறதேர தெரியவில்லையே என்று. கூறிய மாத்திரத்தில் எனக்கு தோன்றிய எண்ணம் தான் எமது நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் “விகல்ப” இணையத்தளத்திற்கு இச் செய்தியை எழுத வேண்டும் என்பது ஆகும். அதுபற்றி தங்கையோடு கதைத்துக்கொண்டிருக்க தங்கை கூறினால் பஸ் இலக்கத்தை இறங்கியவுடன் குறித்துக்கொள்வோம் என்று‚ இவ்வாறு கதைத்துக்கொண்டிருக்க திடீரென பஸ்ஸின் வேகம் அதிகரித்தது. அத்துடன் பஸ்‚ தரிப்பிடங்களில் அதிக நேரம் நிறுத்தி வைக்காமலும் வேகமாக பயணித்தது. என்னவென்று பார்க்கையில் பஸ்ஸின் ஃபுட் போர்ட்டில் ஒரு பொலிஸ் அதிகாரி நின்றுகொண்டு பயணித்தார். எனவே நாமிருவரும் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்து சிரித்தோம். எமது நல்ல நேரம் தான் பொலிஸ் அதிகாரி பஸ்ஸில் ஏறியது என்று நினைத்துக்கொண்டு வந்தோம். நாம் இறங்க வேண்டிய இடம் வுாரசளவய ெகல்லூரி அருகில் ஆகும். அவ்விடத்தில் இறங்கும் போது சரியாக 9.45 மணி இருக்கும். இந்த நேரத்திலாவது வந்து சேர்ந்ததற்கு அந்த பொலிஸ் அதிகாரி தான் காரணம். அவருக்கே தெரியாமல் அவர் ஒரு நன்மை செய்திருக்கிறார். என்று தான் கூற வேண்டும். இறங்கியவுடன் பஸ் இலக்கத்தை குறித்துக்கொண்டோம்.
எரிபொருள் விலை அதிகரித்தால் உடனே‚ தனியார் பஸ் சங்கத்தினர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டும் கலந்துரையாடியும் தமது பிரச்சினைக்கு எப்படியேர தீர்வு கண்டு விடுகின்றனர். ஆனால் அப்பாவிப் பிரயாணிகள் தான் எப்போதும் பாதிக்கப்படுகின்றனர். பஸ் கட்டணங்கள் உயர்வாக இருக்கிறது என்று பிரயாணிகள் எப்போதும் ஆர்ப்பாட்டம் செய்வதில்லையே. அவ்வாறு செய்வதற்கு பிரயாணிகளுக்கு சக்தியும் இல்லை. தேவைப்பாடும் இல்லை. மாறாக ஒன்று கூடினால் சட்டத்தின் உதவியும் கிடைக்காது. அது தான் எமது நாட்டின் தற்போதைய நிலைமை.
இன்றைய பாதுகாப்பு சூழ்நிலை கருதி எல்லாப் பகுதிகளிலும் வீதிகள் ழநெ றயல ஆக்கப்பட்டுள்ளன. ஆனால் அது சாதாரண மக்களுக்கல்ல. மாறாக அரசியல் வாதிகளுக்காகவே பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இலகுவாகச் செல்லக்கூடிய வழிகள் இருக்கையிலேயே அவ்வாறு செல்ல முடியாது‚ நாம் சென்றடைய வேண்டிய இடத்திற்கு சுற்றி வளைத்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் நேர விரயம் போதாதென்று இப்படிப்பட்ட பஸ் நடத்துனர்களின் மனிதாபிமானமற்ற செயல்களினால் பிரயாணிகள் உரிய நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றடைய முடியாமல் பெரும் துன்பத்திற்கு உள்ளாகின்றனர். பயணிகள் சட்டம் என்று ஒன்று இருக்கிறதா? இருந்தால்‚ அப்பாவிப் பயணிகள் எதிர்நோக்கும் இது போன்ற இன்னோரான பிரச்சினைளுக்கு அவர்களுக்கு தீர்வு தான் கிட்டுமா…………..?

கமலாதேவி