தமிழ், Colombo, Peace and reconciliation

தொடரும் கடத்தல்கள்‚ கொலைகள் இதற்கு யார் பொறுப்பு?

யாழ். குடாநாட்டில் ஊடக வள பயிற்சி நிலைய மாணவன் சகாதேவன் நிலகஷன் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாமை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தொயாதோரால் ஈவிரக்கமின்றி மிகக் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ். நகருக்கு மூன்று மைல் தொலைவிலுள்ள கொக்குவிலில் அவரது வீடு இருக்கின்றது. யாழ. குடாநாட்டில் இரவு 9.00 மணியிலிருந்து அதிகாலை 6.00 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கின்றது. இரவு முழுவதும் யாழ். கொக்குவில் வீதியில் அரச படையினரின் நடமாட்டம் அதிகமாக காணப்படும். ஆங்காங்கே இராணுவத்தினரின் சோதனைச்சாவடிகளும் இருக்கின்றன. இந்த நிலையில் படையினரை மீறி இனந்தெரியாதோர் மோட்டார் சைக்கிளில் எவ்வாறு நிலக்ஷனின் வீட்டுக்கு வந்தார்கள் என்பது புரியாத புதிராக இருக்கின்றது.

சகாதேவன் நிலக்ஷன் 22 வயதேயான இளைஞர். ஊடகத்துறையில் புகுந்து பெயர் பெற வேண்டுமென்ற கனவுடன் வாழ்ந்தவர். இந்த இளைஞனின் கனவுகள் நனவாகதை பொறுக்க முடியாத கயவாக்ள் இந்த இளைஞனின் உயிரைப் பறித்துச் சென்றுள்ளனர். அது மட்டுமன்றி இப்போதும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் சுதந்திரமாக எங்கேர நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

இராணுவத்தினரது நடமாட்டம் மாத்திரமே காணப்படும் ஊரடங்கு வேளையில் இனந்தெரியாதோர் மோட்டார் சைக்கிளில் வந்தது எப்படி? இராணுவத்தினருடன் யாழ். நகரில் இயங்கும் ஒட்டுக் குழுதான் இந்த கொடூரக் கொலைக்கு காரணம் என யாழ். மக்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.

நிலக்ஷன் யாழ். மாணவர் பேரவையின் தலைவராகவும் இருந்துள்ளார். ஒட்டுக் குழுக்களின் இலக்குக்கு இறையானதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாமெனவும் கூறுப்படுகிறது. காலஞ்சென்ற நிலக்ஷன் ஊடகவியலாளர் அமரர் சிவராமின் இரண்டாவது ஞாபகார்த்த தினத்தை யாழ். குடர நாட்டில் அனுஷ்டிக்க முன் நின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே வேளை கொழும்பில் ஆட்களைக் கடத்துவதும் கொலை செய்வதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. கொழும்பிலும் அதை அண்டிய பிரதேசங்களில் மாத்திரம் இவ்வருடம் 143 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்து எதுவித தகவலும் இல்லை. கடந்தவாரம் கொட்டாஞ்சேனை வாசியான கடாசன் மகாதர் கடத்தப்பட்டார். இவரது குடும்பத்தினரிடம் இவரை விடுவிக்க ஐம்பது லட்ச ரூபர கோரப்பட்டதும் அது கிடைக்காமற் போகவே இந்த தமிழ் இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். இவரது சடலம் புவக்பிட்டியிலுள்ள காட்டுப் பகுதியொன்றில் புதைக்கப்பட்டிருந்தது. பொலிஸார் இச் சடலத்தை மீட்டுள்ளனர்.

கொழும்பில் கடந்த வாரம் காணாமற் போனோரின் உறவினர்களது மாநாடு நடைபெற்றது. பெற்றோர்‚ மனைவிமார்‚ பிள்ளைகள் என பலர் இங்கு கூடியிருந்தனர். ஒவ்வொருவரிடம் ஒரு சோகக் கதை. இவர்கள் கண்ணீர் வடித்ததைப் பார்த்தால் எந்தக் கல்நெஞ்சமும் கரைந்துருகும். இந்தக் கண்ணீருக்கு இப்போது பதில் சொல்ல எவருமில்லை. இருந்தாலும் இந்த அப்பாவிகளின் கண்ணீருக்கு என்றாவது யாராவது பதில் கூறித்தான் ஆகவேண்டும்.

– எஸ். கணேசன்