தமிழ், Colombo, Education, Features

இதுவா எமது கலாசாரம்!

international-school.bmp
நமது சமயங்கள் தோன்றப்பெற்றது தொட்டு எமக்கென்று ஒரு கலாசாரம் பிறந்தது. இந்து‚ பெளத்தம்‚ கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதத்தினரும் வாழும் இந்த இலங்கை நாட்டில் அந்தந்த மதத்தவரின் கலாசாரங்கள் தற்போது – இந்த நவீன காலத்தில் பின்பற்றப்படுகின்றனவா? ஓவ்வொரு மதம் சார்பிலும் பல்வேறு கோட்பாடுகள்‚ சம்பிரதாயங்கள்‚ சாஸ்திரங்கள் வகுக்கப்பட்டே இருக்கின்றன. இவை யாவும் மக்களால் கடைபிடிக்கப்படுகிறதா?

சுரி….. வகுக்கப்பட்டிருக்கும் கலாசாரத்தை அப்படியே பின்பற்றாவிட்டாலும் ஓரளவாவது எதற்காக‚ யாருக்காக என்று சற்று சிந்தித்துப் பார்க்கலாம் அல்லவா. நாம் வரம்பு மீறுகின்றோமா?‚ நாம் செய்வது சரியர என்று கூட சிந்தித்துப் பார்க்கலாம்தானே?

கலாசாரம் தற்போது எவ்வாறு பேணப்பட்டு வருகிறது என்பதற்கு சிறந்த சான்றாக அண்மையில் கொழும்பில் ஒரு நிகழ்வொன்று இடம்பெற்றிருக்கின்றது.

கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றின் நிகழ்வு (பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபம்) இதுவாகும். அந்த நிகழ்ச்சியின் சில படங்களையே நீங்கள் மேலே காண்கிறீர்கள். எப்படி? எமது கலாசாரம் பார்த்தீர்களா? இதில் இந்து‚ பெளத்தம்‚ கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதத்தினரும் இருக்கின்றனர். இவர்களின் ஆட்டமும் பாட்டமும் கவர்ச்சியான உடையும் செயற்பாடுகளும் பார்த்தவுடன் என்ன தோனுகிறது.

இவை அனைவற்றுக்கும் காரணம் சர்வதேச பாடசாலைகள் இலங்கைக்குள் வேறூன்றியதாலேயாகும் என்று கூறுவது தவறு. அவர்களும் என்ன பாடம்தானே சொல்லிக் கொடுக்கிறார்கள். இப்படி ஒரு பொது இடத்தில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக்கொள் என்றர சொல்லிக்கொடுக்கிறார்கள்.

இந்தப் படத்தைப் பாருங்கள். உங்கள் மகன் அல்லது மகள் இந்த இடத்தில் இருக்கலாம். இவற்றைப் பார்த்தவுடன் இவர்களின் பெற்றோர்களும் இவ்வாறு நடந்துகொள்வார்களேர என்று எண்ணத் தோன்றுகிறது.

இவர்களின் இவ்வாறான அசிங்கமான நடத்தைகளுக்கு முழுக்க முழுக்க பெற்றோர்களே காரணம். கடைசியில் மகள் கர்ப்பமடைந்து வீடு வந்தவுடன் தண்டிப்பது. வெள்ளம் வர முன்னரே அணையைக் கட்டுவதை விட்டு விட்டு முழு கிராமத்தையும் வெள்ளம் அழித்ததன் பின் அணையைப் பற்றி சிந்திப்பதில் எந்தவிதப் பயனும் இல்லை.

நமது கலாசாரத்தை நாங்கள்தான் பாதுகாக்கவேண்டும். இதற்கு பெற்றோர்களாகிய பெரியோர்களே முக்கிய பங்கு வகிக்க வேண்டும். அவர்கள் சிறு வயதிலிருந்தே தனது பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை‚ எமது கலாசாரத்தை சொல்லிக்கொடுத்து வந்தால் இவ்வாறான தவறுகள் நேராமல் தடுக்கலாம்தானே!

பெற்றோர்கள் மட்டுமல்ல இவ்வாறு நடந்துகொள்ளும் இளைஞர் யுவதிகளே சிந்தித்துப் பார்த்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள். எங்கள் கலாசாரம் நமது கையில்தான் இருக்கிறது.

S.Rajasegar