Archive for தமிழ்
May 8, 2008 at 10:52 am · Categories: தமிழ், Human Security | by Vikalpa_N
அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய தேசிய ரீதியில் பிரச்சினைக்குரிய ஐந்து முக்கிய விடயங்களை அவர்களின் கணிப்பின் படி முக்கியத்துவத்தின் அடிப்படையில் அவற்றை தரப்படுத்துமாறு பொதுமக்களிடம் கேட்கப்பட்டபோது‚ தென் இலங்கை சிங்கள மக்களில் 28.1் சதவீதமானவர்கள் பொருளாதாரத்தையும் 22.7 சதவீதமானவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் காணப்படும் மோதல் என்பதையும் 19.8 சதவீதமானவர்கள் இலங்கையின் சமாதானச் செயற்பாடு என்பதையும் 15 சதவீதமானவர்கள் சட்டமும் ஒழுங்கும் என்பதையும் 13.7 சதவீதமானவர்கள் ஊழல் என்பதையும் தமது முதல் தெரிவாக குறிப்பிட்டுள்ளனர்.
சிறுபான்மை சமூகத்தவர்களை பொருத்தவரையில்‚ பொருளாதாரத்தை 27.4 சதவீதமான மலையகத் தமிழர்களும்‚ 33.5 சதவீதமான முஸ்லிம் சமூகத்தவர்களும் தெரிவு செய்திருந்தனர். வடக்கு மற்றும் கிழக்கில் காணப்படும் மோதல் என்பதை தெரிவுசெய்த முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழர்கள் முறையே 16.0‚ 16.9 சதவீதத்தினராகும். இலங்கையின் சமாதானச் செயற்பாடு என்பதை 29.2 சதவீதமான முஸ்லிம் சமூகத்தவர்களும்‚ 25.2 சதவீதமான மலையகத் தமிழர்களும் தெரிவுசெய்திருந்தனர்.
இந்த புள்ளிவிபரங்கள் கடந்த வாரம் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கருத்துக் கணிப்புப் பிரிவான சோஷல் இன்டிகேட்டரினால் வெளியிடப்பட்ட 2008 பங்குனி மாத “சமாதான நம்பிக்கைச் சுட்டி” (பீ.சீ.ஐ) ஆய்வு முடிவு …
May 5, 2008 at 3:52 pm · Categories: Colombo, සිංහල, தமிழ், English, Democracy, Media, Eastern Elections, Trincomalee | by Vikalpa Admin
Vikalpa has launched a new micro-site on Twitter with short reports generated by its citizen journalist network in the Eastern Province on election related violence and malpractices. Please visit our Eastern Elections 2008 site for the latest updates, that are also featured on Vikalpa (see column in the middle).
This is the first time in Sri Lanka that reports via SMS from citizens at the grassroots are being used to provide perspectives from the Eastern Province in the lead up to and on the day of the elections (10th May 2008).
While we cannot check the veracity of each SMS we receive in a timely manner, we hope and expect that citizens themselves will actively engage with reports posted …
March 31, 2008 at 12:00 pm · Categories: Peace and reconciliation, தமிழ், Democracy | by Vikalpa_N
இலங்கை இராணுவம் கிழக்கு மாகாணம் முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததை‚ ‘கிழக்கின் உதயம்’ என‚ கடந்த வருடம் யூலை மாதம் 19ம் திகதி‚ சுதந்திர சதுக்கத்தில் அரசு வெகு விமரிசையாக கொண்டாடியது. இவ்விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுகையில் கிழக்கு மாகாணம் தொடர்பாக பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.
‘கிழக்கு மாகாண மக்களுக்கு தமது அடிப்படை உரிமையான வாக்கைப் பயன்படுத்தும் உரிமை கிடைக்கப்பெற்றிருந்ததா? 15 வருடங்களாக இந்த அப்பாவி மக்களின் பிரஜர உரிமை பறிக்கப்பட்டிருந்தது. பறிக்கப்பட்ட இந்த உரிமையை நாம் மீண்டும் பெற்றுக்கொடுப்போம். இந்த வருட இறுதியில் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் நடாத்தப்படும். இவ்வருட இறுதியில் தமது பிரதிநிதிகளை உள்ளுராட்சி மன்றங்களுக்கும் மாகாண சபைக்கும் தேர்ந்தெடுக்கும் உன்னத உரிமை கிழக்கு மாகாண மக்களுக்கு கிடைக்கும். கடந்த காலம் முழுவதும் தேர்தல் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் இதற்கும் கனவில் பயந்ததுபோல் சத்தமிடுவார்கள். என்று தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 9 உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி 18ம் திகதி முதல் 25ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என இவ்வருடம் ஜனவரி 12ம் திகதி‚ தேர்தல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டது. ஜனவரி …
March 19, 2008 at 11:40 am · Categories: தமிழ், Governance, Democracy | by Vikalpa_N
சமீபத்தில்‚ தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்கு யோசனைகளை முன்வைக்க என்று அமைக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவினரால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் 13வது திருத்தச்சட்டத்தை அடிப்படையாக கொண்டதாக அமைந்திருந்தது தெரிந்ததே. 13வது திருத்தச்சட்டம் 1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையின் கொண்டு வரப்பட்டது. கிட்டத்தட்ட 30 வருட பிரச்சினைக்கு 20 வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாமல் கிடந்த திருத்தச்சட்டமாகும். இதனையே முழுமையாக நடைமுறைப்படுத்தப் போவதாக அரச தரப்பு தெரிவிக்கிறது. இச்சட்டத்தின் அடிப்படையில் அமையும் சர்வகட்சி பிரதிநிதித்துவ குழுவின் விரிவான கருத்தொருமிப்பு ஆவணம் விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளதாக தெரிவித்திருந்தது.
அரசாங்கத்தின் பங்காளிகளான ஜாதிக ஹெல உருமய மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் இரண்டும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளையும் (வுஆஏீ) சர்வகட்சி பிரதிநிதித்துவ குழுவில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
அண்மையில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ‚ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கலந்துரையாடிய போது 13வது திருத்தச்சட்டத்தை செயற்படுத்துவதற்கு முழுமையான ஆதரவை தாம் வழங்குவதாக தெரிவித்திருந்தார். சர்வகட்சி பிரதிநிதித்துவ குழுவில் எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இடம் பெறவில்லை என்பது …
March 10, 2008 at 4:17 pm · Categories: Peace and reconciliation, தமிழ், Democracy | by Vikalpa_N
ஜனநாயகத்தின் வரைவிலக்கனங்களில் மிகப் பிரபல்யமானது அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் கூறிய “மக்களினால் மக்களுக்காக மக்ககளால் ஆளப்படும் ஆட்சி” என்பதே.
ஜனநாயகத்தில் நேரடி ஜனநாயகம் பிரதிநிதித்துவ ஜனநாயகம் எனும் இரு வகை காணப்பட்டது. கிறேக்க தேசத்தின் எதேன்ஸில் ஜனநாயகத்தின் ஆரம்பம் நேரடி ஜனநாயகம் ஆகும். மைதானத்தில் ஒன்றுகூடிய மக்களின் உயர்த்தப்படும் கைகளை கணக்கிட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. சனத்தொகை பெருக்கம்‚ வேறுபட்ட கருத்துகளின் தோற்றம்‚ மற்றும் ஆளும் நிலப்பரப்பின் பூகோல விரிவாக்கம் என்பன நேரடி ஜனநாயகம் வலுவிழந்து பிரதிநிதித்துவ ஜனநாயகமாக பரினமிக்க ஏதுவாக அமைந்தன. பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் நவீன நிலையாக “அரசியல் கட்சி்” எனும் அமைப்பு உள்ளது. வேறுபட்ட கொள்கைகளை உடையவர்களை பிரதிநிதித்துவப்படுத்த கட்சி எனும் அமைப்பு தோற்றம் பெற்றது. ஆனாலும் இன்றைய நிலையில் சாதி‚ இன‚ மத‚ மொழி என்ற ரீதியில் கருத்துக்களை முன்வைத்து‚ அதனடிப்படையில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த விளைவது சற்று சலிப்பான விடயம்.
தெரிவித்தல் - தெரிந்து கொள்ளல்
நடைமுறையில் பொதுவாக நோக்குகையில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் தாம் மேல் மட்டத்தில் எடுக்கும் தீர்மானங்கள்‚மற்றும் தமது கொள்கைகள்‚ நிலைப்பாடுகள் பற்றி பொதுமக்களுக்கு தெரியப்படுத்த பல்வேறு …
March 4, 2008 at 3:47 pm · Categories: Peace and reconciliation, தமிழ், Human Rights, Human Security | by Vikalpa_N
கொழும்பை அண்டிய பிரதான நகரம் ஒன்றில் வார நாள் ஒன்றின் பரபரப்பான காலைப் பொழுது. பெரும்பான்மை சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர். மேலிந்த கரிய உருவம். அழுக்கான உடை. வெறும் கால். குழம்பிய தலை. கைகளில் இரண்டு பெரிய பைகள். ஒரு வாய் மூடி கட்டப்படாத உரப்பை நிறைய அகத்திக் கீரை. ஒரு ஔி ஊடுபுக விடும் பொலிதீன் பை நிறைய அகத்திப் பூ. புறக்கோட்டை நோக்கிப் போகின்ற பேரூந்தில் ஏற மிகத் தீவிரமாக முயற்சித்து தோற்றுக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 10‚ 12 பேரூந்துகள் அவரை ஏற்றிக் கொள்ள மறுத்தது. பாவம் அந்த அப்பாவி கீரை வியாபாரி. அன்று அவனது வியாபாரம் என்னானது? அன்றைக்கு அந்தக் கீரையையும் பூவையும் விற்க முடியாவிட்டால் அவன் என்ன செய்வான். இந்தப் பேரூந்து தரிப்பிடத்தில் நின்ற மூன்று பேர் தங்களுக்குள் ‘இப்போது அனேகமான பேரூந்துகளில் பொதிகளை ஏற்றிச் செல்ல அனுபதிப்பதில்லை. கொழுப்புக்குள் மட்டுமல்ல தூர இடங்களுக்கான பேரூந்துகளிலும் இதே நிலைமைதான்’ என்று கதைத்துக் கொண்டனர்.
இந்த அப்பாவி வியாபாரிக்கு நடந்ததும்‚ அந்த மூன்று பேர் கதைத்துக் கொண்டதும் அப்படியே தென் இலங்கை முழுவதும் …
February 29, 2008 at 1:17 pm · Categories: Peace and reconciliation, தமிழ், Human Rights, Human Security | by Vikalpa_N
ஐக்கிய நாடுகள் சபை‚ 2008ஐ ‘சர்வதேச மொழிகள் ஆண்டு’ என்று பிரகடனப்படுத்தியுள்ளது. இதனை கொண்டாடுவதற்கு எல்லர மொழிகளையும் பாதுகாக்கவும் விருத்தி செய்யவும் முன்வருமாறு எல்லர அரசாங்கங்கள்‚ ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் அமைப்புகள்‚ சிவில் சமூக அமைப்புகள்‚ கல்வி நிறுவனங்கள்‚ துறைசார் நிபுணர்களின் சங்கங்கள்‚ மற்றும் அனைத்து பங்குதாரர்களையும் யுநெஸ்கேர நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையை பொருத்தவரை சிங்களம்‚ தமிழ்‚ ஆங்கிலம் எனும் மூன்று மொழிகள் பிரதானமாக உள்ளன.
இலங்கை சுதந்திரம் அடைந்து 60 வருடங்கள் கடந்ததுவிட்டது. இந்த 60 வருடங்களில் அரைவாசியான 30 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட மாட்டாமல் உள்ளது. இலங்கை சுதந்திரம் அடைந்து பின்னர் இடம்பெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகளில் 1956ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டம் தனியிடம் பெறும் ஒரு நிகழ்வாகும். இன்று இலங்கை முகம் கொடுத்துள்ள போருக்கும் சிங்களம் மட்டும் சட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என வாதம் புரிகின்ற தரப்புகள் இருக்கின்றன. யார் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் சிங்களம் மட்டும் சட்டமானது இலங்கையின் இன்றைய நிலைமைக்கு பாரிய அளவில் காரணமாய் அமைந்தது என்பதுதான் யதார்த்தம்.
ஐக்கிய …
February 27, 2008 at 11:57 am · Categories: Peace and reconciliation, தமிழ், Kandy, Human Rights, Human Security | by Vikalpa_N
படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் வெலிஓயவில் கொல்லப்பட்ட இராணுவச் சிப்பாயின் சடலம் கண்டி‚ கிரிமெடிய தோட்டத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து பெரும்பான்மையின இளைஞர்கள் குழுவொன்று அத்தோட்டத்திலுள்ள தமிழ் தோட்டத்தொழிலாளர் வாழும் லயன் அறைகளுக்குச் சென்று அச்சுறுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதனால்‚ அப்பகுதியில் வாழும் தோட்ட தமிழ் மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என அறியமுடிகிறது.
கண்டி மாவட்டத்தின்‚ யட்டிநுவர தேர்தல் தொகுதியில் உள்ள கிரிமெடிய தோட்டத்தில் சிங்களவர்களே பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்தப் பகுதியில் பெரும்பாலான சிங்கள இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்துள்ளனர். இதில்‚ ரத்னவீர நிலன்த குமார என்பவர் வெலிஓய பகுதியில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்துள்ளார். இவரின் சடலம் கிரிமெடிய தோட்டத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து‚ கொதித்துப்போன குறித்த சுமார் 15 பேரைக் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று சிப்பாயின் சடலம் சனிக்கிழமை புதைக்கப்படவிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை (23.02.2008) இரவு 12.00 மணிக்கு தமிழர்களின லயன் அறைகளுக்கு ஆயுதங்கள் சகிதம் வந்து பெரும் சத்தத்துடன் கூச்சலிட்டுள்ளனர். “தமிழர்கள் அனைவரையும் கொல்லவேண்டும். எல்லோரும் வெளயே வா” என்றவாறு வீட்டின் கதவுகளைத் தட்டியுள்ளனர். இந்தக் குழுவைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் இராணுவத்திலிருந்து தப்பியோடிவந்தவர்களாவர். …
·
Next entries »