සිංහල

பொது இடத்தில் மரணதண்டனை விதிக்கப்பட வேண்டியவர்கள்.

‘மனிதன்‚ சமூக வாழ்க்கையை மேற்கொண்டுவிட்ட ஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர்.
‘உறவுகள் என்பது உன்னதமானவை. காட்டு மிராண்டிகளாகச் சிதறிக் கிடந்த மனிதர்கள் குடிபெயர்ந்து ஊர்ந்து வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள். அதனால்‚ அவர்கள் வாழ்ந்த இடம் ஊர் என்று அழைக்கப்பட்டது.
‘அதில்‚ பலர் நகர்ந்து வந்து பெருங்கூட்டமாக ஓரிடத்தில் குடியேறினார்கள். அவ்விடம் நகரம் என்றழைக்கப்பட்டது.
‘தனி மனிதர்கள் சமூகமாகிவிட்டார்கள். தனி மனிதனுக்கான நியதிகளோடு சமுதாயத்திற்காகச் சில சம்பிரதாயங்களும் உருவாயின. அந்தச் சம்பிரதாயங்களுள் சில புனிதமாகக் கருதப்பட்டுத் தருமங்களாயின.
‘கணவன்-மனைவி உறவு‚ தாய்-தந்தை உறவு‚ பெற்றோர்-பிள்ளைகள உறவு‚ ஊர்ப்பொது நலத்துக்கான கூட்டுறவு முதலியவைகள் தோன்றின.’
– இ்வ்வாறு உறவு முறை உருவானமை குறித்தும் உறவு முறை குறித்தும் கவிஞர் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம் பாகம்-1இல் உறவு எனும் தலைப்பில் விளக்கப்படுத்தியுள்ளார்.
உறவு முறை உணர்ச்சிபூர்வமானது. இவ்வாறு உறவு முறை குறித்து கூறிக்கொண்டே போகலாம்.
இருப்பினும்‚ தற்போது மனித குலத்திடம் உறவு முறை பேணப்படுகிறதா என்பதே சந்தேகம். அதுவும் இலங்கையில். இலங்கையில் அண்மையில் நடந்த சம்பவங்களே இதற்கு சிறந்த சான்றாகும். தனது 10 வயது மகனையே கொலைசெய்ய உத்தரவிட்ட தாயும் இருக்கிறாள் நம்நாட்டில். ஹொரன அகுருவாதொட பகுதியில்தான் இந்தப் பரிதாபச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி திட்டமிடப்பட்டு – 14ஆம் திகதி கொலைசெய்யப்பட்டு – 15ஆம் திகதி சேறு நிறைந்த வயலிலிருந்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.
அகுருவாதொட மில்லனிய தொடங்கொட சீலரதன வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரிட்சையின் கடைசிப் பரிட்சைக்கு சென்றுகொண்டிருந்தபோதே புத்திக லக்மால் என்ற இச்சிறுவனுக்கு இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
குறித்த சிறுவனின் வீட்டில் ஒரு அறையில் வாடகைக்காக தங்கியிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான பிரிங்கரகே சுமனசிறி பிரியங்கர (வயது-47‚ கொழும்பு தனியார் வைத்தியசாலையில் பாதுகாவலராக பணிபுரிகின்றார்.) மற்றும் அகுருவாதொட பகுதிக்கு மாடு விலைக்கு வாங்கும் முஸ்லிம் வியாபாரியான மொஹமட் பகீர் மொஹமட் நிலாம் ஆகியோருக்கே தனது மகனை கொலைசெய்ய உத்தரவிட்டிருக்கிறாள் இந்தத் தாய்.
குறித்த வியாபாரியுடன் உடலுறவு கொண்டிருந்தபோது அதனை மகன் கண்டிருப்பதனாலும்‚ இந்தச் சம்பவத்தை அண்மையில் செளதி அரேபியாவிலிருந்து வரவிருக்கும் கணவரிடம் தெரிவித்துவிட்டால் பிரச்சினை பெரிதாகிவிடும் என்ற அச்சத்தினாலுமே இந்தக் குணங்கெட்ட தாய் மகனை கொலைசெய்ய உத்தரவிட்டிருக்கிறாள். வீட்டில் தங்கியிருந்த பிரியங்கரவுடனும் இவர் உடலுறவு கொண்டுள்ளார் என்று பொலிஸாருக்கு அறியக்கிடைத்திருக்கிறது. இது தாய்மைக்கே ஒரு இலுக்காகும்.
சிறுவன் புத்திக லக்மால் புலமைப்பரிசில் பரிட்சைக்கு செல்லும்போது புத்த பெருமானுக்கு பூ (வெடகெய்யர மல்) பறித்துத் தருவதாகக் கூறி பிரியங்கர பாதகட எனும் பகுதிக்கு தனது சைக்கிள் மூலம் அழைத்துச்சென்றுள்ளான். அங்கு வியாபாரியும் பிரியங்கரவும் இணைந்து புத்திக லக்மாலை கொலைசெய்துள்ளனர். கைகள் இரண்டையும் பின்னால் பிடித்துக்கொண்டு கழுத்தை நெறிக்க‚ புத்திக மரண ஓலமிட்டு்ள்ளான். உடனே அண்மையில் இருந்த சேறு நிறைந்த வயலில் புத்திகவின் முகத்தை திணித்து உயிர்போகும் வரை அமிழ்த்தியிருந்துள்ளனர். சேறு நிறைந்த தண்ணீர் மூக்கு‚ வாயில் அடைப்பட்டு சுவாசிக்க முடியாமல் புத்திக மரணத்தைத் தழுவிக்கொண்டுள்ளான்.
முதலில்‚ 3 லட்சம் கப்பமாகப் பெறுவதற்காகவே வீட்டில் தங்கியிருக்கும் பிரியங்கர இந்தப் பயங்கரத்தை மேற்கொண்டிருந்தான் என்று பொலிஸார் தெரிவித்தபோதும்‚ பின்னர் மாடு விலைக்கு வாங்கும் நபர் ஒருவர் தொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து அதனைத் துருவித் தேடிய பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பான முழு விவரத்தையும் தேடிக்கண்டுபிடித்தனர். இதன் பின்னரே தாய்‚ வியாபாரி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த சிறுவன் புத்திகவின் தந்தை இன்னும் இலங்கை வந்துசேரவில்லை என்று அறியமுடிகிறது.
இவ்வாறான கொடூரமான குணங்கெட்ட தாய்க்கு எவ்வாறான தண்டனை வழங்கப்பட வேண்டும். இவருக்கு வழங்கப்படும் தண்டனை ஏனைய இவ்வாறான குணங்கெட்ட தாய்களுக்கு நல்ல படிப்பினையாக அமையவேண்டும்.

இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு நீதிமன்றம் என்ன தண்டனை கொடுக்கப்போகிறது? 20 வருடமர அல்லது 30 வருடமா? இல்லையென்றால் ஆயுள் தண்டனையா? இந்தத் தண்டனைகள் இவ்வாறான கொடூரங்களைப் புரியும் பாசமற்ற மிருகங்களுக்கு போதுமா? மேற்குறிப்பிட்ட தண்டனைகள் இவ்வாறான குற்றங்களை செய்துகொண்டுவரும் – மேற்கொள்ள எண்ணியிருக்கும் – மிருகங்களுக்கு படிப்பினையாக – ஒரு முட்டுக்கட்டையாக – தண்டனையாகவே இருக்குமர என்பது சந்தேகமே. அப்படியென்றால் இந்தக் குணங்கெட்ட தாய்க்கு என்ன தண்டனை வழங்குவது? என்னைப் பொறுத்தவரை மக்கள் நிறைந்த பொது இடத்தில் மரணதண்டனை வழங்கப்படவேண்டும்.

இதைப் பார்த்தாவது ஏனையோர் திருந்தவேண்டும்.
இவ்வாறான குணங்கெட்ட தாய்களும் இருக்க தாய்மை என்ற புனிதத் தன்மையை காக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்து மதத்தில் ஒரு புனிதத் தாயைப் பற்றிய சிறிய புனைக்கதையொன்று இருக்கிறது.
ஒரு தாய் அவளுக்கு ஒரு மகன் அந்த மகனேர தாசிலோலன் ஒரு தாசியிடம் மனதைப் பறிகொடுத்தான்.
‘மனம் போகும்படியே பொருள் போகும்’ என்றபடி பொருள்களையும் பறிகொடுத்தான். அவனிடன் பொருள் இல்லை என்பதை அறிந்த கணிகை அவனைத் துரத்தியடித்தாள்.
அவனேர மோக லாகிரி முற்றி‚ “உனக்கு எது வேண்டுமேர கொண்டு வருகிறேன்” என்று காலில் வீழ்ந்தான்.
அவள் கேலியாகச் சிரித்துக்கொண்டே “உன் தாயின் இருதயம் எனக்கு வேண்டும்” என்றாள். காம மயக்கத்தில் சிக்கிய அவன் தாயிடம் ஓடினான்.
“அம்மா! அவளுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை. உன் இருதயம் வேண்டும் என்கிறாள். அவளை என்னால் மறக்க முடியாதம்மா” என்றழுதான்
தாய் கேட்டால்:
“அதன் மூலம் திருப்தியடைந்து உன்னுடனேயே அவள் இருப்பாளர மகனே?”
“இருப்பாள்” என்றான் மகன்.
தன்னைக் கொன்று இருதயத்தை வெட்டி எடுத்துக்கொள்ளும்படி தாய் கூறினாள்.
அவன் தாயைக் கொன்றான். இருதயத்தை எடுத்தான். வலது கையில் ஏந்தியவாறு கணிகை வீடு நோக்கி ஓடினான். வழியில் ஒரு கல்‚ தடுக்கிக் கீழே வீழ்ந்தான். கையிலிருந்த தாயின் இருதயம் நான்கு அடி தள்ளி வீழ்ந்தது.
அடிப்பட்டு வீழ்ந்த அவனைப் பார்த்து‚ அதே இதயம் சொன்னது:
“ஐயோ! வலிக்கிறதர மகனே! நான் உயிரோடில்லையே உனக்கு மருத்துவம் செய்ய.”
மகன்‚ “அம்மா!” என்றலறினான். அவன் ஆவி பிரிந்தது.
ஆம். இதுதான் தாய்மை.

இவ்வாறான தாய்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
குணங்கெட்ட தாய் சொற்ப அளவே இருக்கின்றனர்.
மூன்று தலையோடு கன்றுக்குட்டி‚ ஐந்து குலை தள்ளிய வாழைமரம் என்பது போல குணங்கெட்ட தாயும் ஓர் அபூர்வ சிரு‘்டியே.

எஸ். ராஜசேகர்

பொது இடத்தில் மரணதண்டனை விதிக்கப்பட வேண்டியவர்கள்.