සිංහල, Colombo, Corruption, Human Rights

சிறைக்காவலர்களின் ‘ரீலோட்’ சித்திரவதை

புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்து தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இளைஞர்களிடமிருந்து சிறைக்காவலர்கள் நவீன பாணியில் லஞ்சம் பெற்றுவருகின்றனர் என அறியமுடிகிறது.

புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்களென்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்படும் மலையகம் உட்பட வடக்கு – கிழக்கு பகுதிளைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுகின்றனர். தடுத்துவைக்கப்பட்டிருக்கும் குறித்த தமிழ் இளைஞர்களின் வீட்டு தொலைபேசி இலக்கங்களை அறிந்துகொள்ளும் சிறைக்காவலர்கள‚் அந்த இலக்கங்களூடாக வீட்டாரைத் தொடர்புகொண்டு தங்களது கையடக்க தொலைபேசி இலக்கங்களைக் குறிப்பிட்டு ஆயிரம் ரூபர அல்லது அதற்கு மேல் ஒரு தொகையை மீள் நிரப்புகை (ரீலோட்) செய்யுமாறு உத்தரவிடுக்கின்றனர்.

சில வேலைகளில் குறித்த இளைஞர்களைப் பேசவைத்தும் சிறைக்காவலர்களின் கையடக்கத் தொலைபேசிகள் மீள் நிரப்புகை செய்யப்படுகின்றன.

இத்தகைய சந்தர்ப்பங்களில் பெற்றோரும்‚ தங்களது பிள்ளைகள் சிறையில் கஷ்டங்களை அனுபவிக்கக் கூடாதென்ற எண்ணத்தில் வறுமைக்கு மத்தியிலும் கடன்பட்டாயினும்‚ நகைகளை அடகுவைத்தும் பணத்தைப் பெற்று சிறைக்காவலர்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு மீள் நிரப்புகை செய்கின்றனர்.

இதேவேளை –

தங்களது வீட்டு தொலைபேசி இலக்கங்களை வழங்க‚ வீட்டுடன் தொடர்புகொண்டு பேச மறுக்கும் இளைஞர்களை சிறைக்காவலர்கள் சித்திரவதைக்கு உட்படுத்துகின்றனர் என்றும் தெரியவருகிறது.

இது தொடர்பாக ஊவர மாகாண சபை உறுப்பினர் அ.அரவிந்தகுமார் சிறைச்சாலை ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். இக்கடிதத்தின் நகல்கள் ஜனாதிபதி‚ நீதியமைச்சர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த அராஜகத்துக்கு எதிராக இவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?

அரசில் ஒட்டிக்கொண்டு சுகம் காணும் மலையகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இது பற்றி தகவல் ஏதும் அறிந்திருப்பார்களேர தெரியவில்லை.

S.Rajasegar