සිංහල, Colombo, Democracy, Peace and reconciliation

இந்தியத் தலையீடு: இலங்கை மற்றும் தமிழ்நாட்டு மக்கள் அபிப்பிராயங்கள்

2002ம் ஆண்டு மாசி மாதம்‚ நோர்வேயின் மத்தியஸ்தத்தின் மத்தியில்‚ விடுதலைப் புலிகளுக்கும் அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து‚ இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பிலான வெளிநாடுகளின் தலையீடு அல்லது பங்குபற்றல் ஒரு புதிய திருப்பத்திற்கு உள்ளானது

முக்கியமாக நோர்வே‚ இந்தியா‚ ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்‚ யப்பான்‚ ஐக்கிய அமெரிக்கா‚ சீனர மற்றும் பாகிஸ்தான் ஆகியன இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் செல்வாக்கு செலுத்தும் விதமான நடவடிக்கைகளை முன்னெடுத்த சில நாடுகளாகும்.

தலையிட்ட நாடுகள் சில சமாதான முன்னெடுப்புகளையும்‚ சில இராணுவ ரீதியிலான அல்லது போர் முன்னெடுப்புகளையம்‚ சில இவை இரண்டையும் ஊக்குவிக்கும் வகையில்‚ நேரடியாக மற்றும் மறைமுகமாக‚ தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இந்த நாடுகள் மூன்றாம் தரப்பாக சம்பந்தப்படுவதற்கு அந்தந்த நாட்டு நலன் சார்ந்த ஏதேனும் உள்நோக்கங்கள் இருக்கும் என்ற அபிப்பிராயம் பொதுவாக இலங்கை மக்கள் மத்தியில் உள்ளது.

இந்தியாவின் இராணுவ உதவிகள்

1987ம் ஆண்டு இந்திய விமானங்கள் யாழ்ப்பாணத்தின் வடமராட்சி பகுதியில் உணவுப் பொதிகளை போட்ட சம்பவம் இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் நேரடியாக தலையீடாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து இந்திய இலங்கை ஒப்பந்தமும் நடந்தது. இந்திய அமைதி காக்கும் படை இலங்கை வந்தது. 1990ல் இந்தியப் படை வெளியேறியதோடு இந்தியாவின் நேரடித் தலையீடு முடிவுக்கு வந்தது. வெளிப்படையான நேரடித் தலையீடு முடிவுக்கு வந்தது என்று கூறுதல் பொருந்தும்.

இந்தியா‚ இலங்கை படைகளுக்கு பயிற்சி‚ பற்றும் இராணுவ தளபாட உதவிகளை வழங்கி வருவதும்‚ இதற்கு தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு எதிர்ப்பு இருந்து வருவது நாம் அறிந்ததே.

வவுனியர படைத் தலைமையகம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலின் போது அங்கு இந்தியர வழங்கிய இந்திரர ராடர்களின் பராமரிப்புக் கடமையில் இருந்த இரு இந்திய தொழில்நுட்பவியலாளர்கள் காயடைந்த செய்தி ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து‚ இலங்கைக்கு‚ இந்தியர இராணுவ ரீதியிலான பயிற்சி மற்றும் தளபாட ஒத்துழைப்புகளை வழங்கி வருவதற்கு மேலதிகமாக இராணுவ ரீதியிலான ஒத்துளைப்பின் இன்னுமொரு பரிமானமான மனிதவளம் சார்நத உதவிகளையும் செய்கிறது என்ற விடயம் ஐயமின்றி உறுதிப்படுத்தப்பட்டது.

இலங்கைக் கருத்துக் கணிப்பு

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கருத்துக் கணிப்புப் பிரிவான சோஷல் இன்டிகேட்டரினால்‚ 2008 ஆவணி மாதத்திற்கான “சமாதான நம்பிக்கைச் சுட்டி” (ீஊஐ) ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

இதில் இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவின் தலையீடு வெளிவந்த தொடர்பாக பொதுமக்கள் கொண்டிருந்த அபிப்பிராயங்கள் பற்றிய சில புள்ளிவிபரங்கள் இதில் கவனத்தில் கொள்ளத்தக்கன.

மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினருக்கு மத்தியில் சமதானப் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிக்க சிறந்த நாடு ’இந்தியா’ என்று 82 சதவீதமான மலையகத் தமிழர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவை தமிழர்களில் 38 சதவீதத்தினரும்‚ முஸ்லிம்களில் இரண்டில் ஒரு பகுதியினரும்‚ தென் இலங்கை சிங்கள சமூகத்தவர்களில் 22 சதவீதத்தினரும் தெரிவு செய்துள்ளனர்.

இந்திய நாட்டு அரசாங்கம் இலங்கைக்கு சாதகமாக உள்ளது என்று 84 சதவீதமான தென் இலங்கை சிங்கள மக்கள் நம்புகின்றனர். தமிழர்களைப் பொருத்தவரை இந்தியர இலங்கைக்கு சாதகமாக செயற்படும் நாடு என்று நம்பும் அதே வேளை மலையகத் தமிழர்கள் இந்தியாவானது இலங்கைக்கு சாதாமாக செயற்படும் நாடர அல்லது எதிராக செயற்படும் நாடர என்பது பற்றி எதுவும் கூற முடியாதவர்களாக இருக்கின்றனர்.

இதற்கு மேலதிகமாக அனைத்து இனத்தைச் சார்ந்தவர்களும்‚ புலிகளுடனாக சமாதான முன்னெடுப்புக்களில்‚ அரசாங்கத்தின் போர் முயற்சிகளில்‚ நாடு மின்வலு ஃ மின்சக்தி நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் சந்தர்ப்பங்களில் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இந்தியாவின் பங்களிப்பானது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே தெரிவிக்கின்றனர்.

இந்திய மத்திய அரசு‚ இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியர என்ன வகையில் நிலைப்பாட்டை கொள்ள வேண்டும் என்கினற விடயம் தொடர்பிலான தீர்மானங்களை எடுக்கும் போது இரண்டு முக்கியமான விடயங்களை கருத்தில் கொள்ளப்படுவதாக கொள்ளலாம். ஒன்று தனது பிராந்திய நலன். மற்றையது தமிழ் நாட்டு மாகாண அரசின் அல்லது தமிழ் நாட்டு மக்களின் அபிப்பிராயம்.

மேற்படி இரண்டு விடயங்களும் வெவ்வேறு விகிதங்களில் கலவையாகவே இலங்கை தொடர்பிலான இந்திய நிலைப்பாடு அமைவதாக கொண்டாலும் தனது பிராந்திய நலன் என்பதே அதிபெரும்பான்மை விகிதமாக மத்திய அரசால் கருத்தில் கொள்ளப்படுகிறது
பிராந்திய நலனில் கரிசனை கொண்டு எடுக்கப்படும் முடிவுகளாக இருந்தபோதும் கூட அவை இலங்கைத் தமிழர்களின் நலனை சிறிதளவேனும் காக்கும் வகையில் இதுவரையில் பெரிதாக எதுவும் அமைந்ததில்லை.

தமிழ்நாட்டில் கருத்துக் கணிப்பு

தமிழ்நாட்டில் இருந்து வாரந்தோரும் வெளிவரும் பிரபல சஞ்சிகையான ‘ஆனந்தவிகடன்’ கடந்த ஆவணி மாத முதல் வாரத்தில்‚ இலங்கை விவகாரம் தொடர்பில் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகளை வெளியிட்டிருந்தது.

இதில்‚ இலங்கை பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியர கட்டாயம் தலையிட வேண்டும் என்று 63 சதவீதமானவர்கள் தெரிவித்துள்ளனர். மோதல் நிலை கட்டுப்பாட்டை மீறுகின்ற சந்தர்ப்பத்தில் மாத்திரம் இந்தியர தலையிட்டால் போதும் என்று 25 சதவீதமானவர்கள் தெரிவித்துள்ளனர். ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம்‚ ஆட்சியில் இருப்பது பற்றி சிந்திக்காது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று 47 சதவீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக‚ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்ட தலைவர்களில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (ம.தி.மு.க) தலைவர் வைகோ‚ பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர். ராம்தாஸ்‚ விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாடு சரியானதே என்று இரண்டில் ஒரு பகுதியினர் தெரிவித்தள்ளனர்.

தமிழ்நாட்டை பொருத்தவரை‚ இலங்கை மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது அபிப்பிராய ஆய்வு ஆனந்தவிகடனின் ஆய்வு என்றே சொல்ல வேண்டும்.

பொதுவாக‚ அபிப்பிராய ஆய்வுகள் மூலம் வெளிப்படுகின்ற பொதுமக்களின் அபிப்பிராயங்கள்‚ அரசியல் கட்சிகளால் அல்லது கொள்கைகளை வகுக்கும் நிலையில் உள்ள தரப்பினரால்‚ பொதுவாக மூன்று விதமாக கையாளப்படலாம். ஒன்று‚ அரசியல் கொள்கைகளுக்குள் முழுமையாக உள்வாங்கப்படலாம். இரண்டு‚ அவற்றை முழுமையாகவேர அன்றி பகுதியாகவேர உள்வாங்கிக்கொள்ள முயற்சிகளை முன்னெடுக்களாம். மூன்று‚ மக்களின் அபிப்பிராயங்களை அப்படியே புறக்கணித்து விடலாம்.

இது வரையில்‚ இலங்கை விவகாரம் தொடர்பில்‚ தமிழ்நாட்டு மக்களின் நாடித்துடிப்பை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் செயற்படும் போக்கு மத்திய அரசிடம் இருந்து வெளிப்படவில்லை. ஆனால் தமிழ்நாட்டை சமாலிக்கும் வகையில் ஏதேனும் பஞ்சு மிட்டாய் விடயங்களை செய்ய மத்திய அரசு தவறுவதுமில்லை. ஆனந்த விகடன் ஆய்வு மூலம்‚ இலங்கை விடயங்கள் தொடர்பில் தமிழ்நாட்டு மக்கள் அபிப்பிராயங்கள் வெளிப்படுத்தப்பட்ட நிலையில் மத்திய அரசு மற்றும் தமிழ்நாட்டு மானில அரசு‚ இரண்டும் என்ன செய்யப் போகின்றன? வழமை போன்று பஞ்சு மிட்டாய் கொடுத்து சமாலித்து விடுமா?

இந்த இடத்தில்‚ ஜனநாயக அரசியலில் அரசியல் கட்சிகள்‚ பொதுமக்கள் ஆர்வம் காட்டும் கொள்கைகள் தொடர்பாகவும்‚ அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கும் விடயங்கள்‚ மற்றும் அரசியல் விருப்பு வெறுப்புகள் போன்றவற்றைவும் அறிந்துகொள்வதில் கூடுதல் ஆர்வம் காட்டுவதன் மூலம் கட்சிக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு மக்களிடம் இருந்து கட்சி நோக்கியதாக அமைவது ஆரோக்கியமானதாக அமையும் என்று ஹாவர்ட பல்கலைக்கழக அரசியல் விரிவுரையாளரும்‚ அரசியல் விஞ்ஞானியுமான ‘பிபர நொரிஸ்’ அறிவுறுத்தல் கவனத்தில் கொள்ளத்தக்கது.

மாரிமுத்து கிருஷ்ணமூர்த்தி

21.09.2008