සිංහල, Corruption, Life quips, Puttalam

பணம் பறிக்கும் இடமாக மட்டும் இயங்கும் முன்னேஸ்வரம்

இலங்கையில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களுள் சிலாபம் முன்னேஸ்வரமும் ஒன்று. ஒரு விசேடம் சிவாலயம் என்பதோடு திருக்கேதீஸ்வரம்‚ கோணேஸ்வரம்‚ கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் என்பன வட கிழக்கில் இருப்பதோடு தமிழர்‚ சிங்களவர் என்ற பாகுபாடின்றி யாரும் செல்லும் ஒரேயொரு சிவாலயமாக திகழ்வது இந்த முன்னேஸ்வரம் ஆலயமே.
இலங்கை மக்கள் விசேடமாக இந்துக்களும் பெளத்தர்களும் தமது நேர்த்திகளையும் சிவாலய வழிபாட்டினையும் மேற்கொள்ளும் பொருட்டு நாட்டின் எட்டுத் திக்கிலும் இருந்து வருகை தருகின்றனர். அதிலும் இந்துக்கள் புது வாகனம் எடுத்தாலும்‚ தமது பிள்ளைக்கு முடி இறக்கும் விசேடம் என்றாலும் நம்பிக்கையோடு இங்கு செல்வர். அப்படி நம்பிச் சென்ற நானும் ஒரு நபர்.
எனக்கு பிறந்த மகனின் முடி இறக்கும் வைபவத்திற்கென எனது குடும்பத்துடன் கடந்த 2008ஃ09ஃ20ம் திகதி சனிக்கிழமை சிலாபம் சென்றேன். அங்கு சென்று ஆலய வளாகத்தினுள் எமது வாகனத்தை கொண்டு சென்றது முதல் பணம் பறிக்கும் நடவடிக்கை ஆரம்பமானது. வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி பூஜைக்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் முன்னமே வாகன நிறுத்தற் வாடகை என ஐம்பது (50மூ) ரூபர கொண்ட டிக்கட் எம்மிடம் வழங்கப்பட்டது. அதைப் பெற்றுக்கொண்டு முதலாவது நடவடிக்கையான முடி இறக்கும் இடத்திற்கு சென்றோம். அங்கு முடி இறக்கும் நபருக்கு வழங்க பூஜை தட்டு எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. ஐந்து வெற்றிலைகள்‚ இரண்டு வாழைப்பழங்கள்‚ ஒரு தேங்காய் கொண்ட ஒரு தட்டின் விலை நூற்றி ஐம்பது (150ஃ-) ரூபாய். அதையும் பெற்று அந்த நபரிடம் ஒப்படைத்தேன். முடி இறக்கும் நபர் தமது வேலையை ஆரம்பித்தார். சுமார் பத்து நிமிடத்தில் முடி இறக்கி முடிந்ததும் அவர் தனது கூலி முன்னூற்றி ஐம்பத்து ஒரு (351ஃ-) ரூபர என்று கூறியதும் ஒரு கனம் அதிர்ந்து போனேன். பிள்ளையின் நலனுக்காக செய்யும் செலவு என்பதால் சந்தோ‘மாக அவரிடம் அந்தப் பணத்தை கொடுத்துவிட்டு அடுத்த நடவடிக்கைக்கு சென்றோம். ஆக மொத்தம் அவருக்கான செலவு ஒரு பிளேட் மற்றும் தலைக்குத் தடவவென தேங்காய் தண்ணீர் மாத்திரமே.
அறுநூறு ரூபர கொடுத்து தயாரித்துக் கொண்ட ஒரு பழத் தட்டுடன் ஆலயத்திற்கு அனைவரும் சென்றோம். இறைவனுக்கு சாத்துவதற்கென வீட்டிலிருந்து கட்டிச் சென்ற பூ மாலையையும் அப்பழத்தட்டின் மேல் வைத்தேன். பிள்ளையின் பெயர்‚ நட்சத்திரம் என்பவற்றையும் எழுதி தட்டில் வைத்திருந்தேன். மக்களோடு மக்காக நானும் வரிசையாக பூசைத் தட்டுடன் சென்று கொண்டிருக்க ஒரு குருக்கள் சத்தமாக “பூசை தட்டுள்ளவர்கள் வலது பக்கமாக செல்லுங்கள்‚ ஏனையோர் இடது பக்கமாக செல்லுங்கள்” என தமிழ்‚ சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் சொல்ல நான் மாத்திரம் வலது பக்கம் செல்ல என் குடும்பத்தினர் இடது பக்கமாக வெளியே செல்ல வேண்டியதாயிற்று. பூஜையில் பங்குபற்றும் சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. நான் மற்றவர்களோடு வலது பக்கமாக செல்ல எதிரே நின்ற இன்னுமொரு குருக்கள் தட்டுகளில் உள்ள பிளாஸ்டிக் மாலைகளை எடுத்து ஒரு பெட்டியிலும்‚ பத்திகளை எடுத்து இன்னுமொரு பெட்டியிலும் மறு விற்பனைக்கென பத்திரமாக எடுத்து வைக்கிறார். மக்கள் பக்தியுடன் இறைவனுக்கு சாத்தவென கொண்டுவந்த மாலை‚ பத்தி என்பன இடையிலேயே பறிக்கப்படுகின்றது. எனது தட்டிலிருந்து பூ மாலை எடுக்காததையிட்டு சந்தோ‘ப்பட்டேன். அந்தக் குருக்களை தாண்டியதும் இன்னுமொரு குருக்கள் தட்டிலுள்ள பணத்தை எடுத்துக் கொண்டு அதற்கான ரசீதை தட்டில் வைத்தார். அந்த ரசீதில் பெயர்‚ நட்சத்திரம் எழுதக்கூட அவருக்கு முடியவில்லை. காரணம் அந்தளவிற்கு வேலைப் பளு.
அடுத்தது முக்கிய கட்டம் கர்ப்பக் கிரகத்திற்கு முன் இரண்டு குருக்கள்மார் அதில் ஒருவரிடம் நான் சென்றதும் எனது தட்டிலிருந்த மாலையை எடுத்து பக்கத்திலிருந்த தூணில் சாத்தினார். நான் உடனே “ஐயர அதை இறைவனுக்கு சாத்துவதற்கு தான் கொண்டு வந்தேன்” எனக் கூறியதும் இன்னுமொரு குருக்கள் அதை எடுத்துச் சென்று இறைவனுக்கு சாத்தினார். எனது தட்டில் எழுதியிருந்த பிள்ளையின் பெயரை மாத்திரம் உச்சரித்த குருக்கள் நட்சத்திரத்தைக் கூட சொல்லாமல் போனதால் என் மனதிற்கு பெரும் க‘்டமாக இருந்தது. அது மட்டுமல்லாது பூஜைத் தட்டைக் கூட கர்ப்பக்கிரக அறைக்கு அவர்கள் எடுக்காத காரணத்தினால் அந்தப் பூஜையில் எந்தவொரு பெறுமதியும் இல்லை என்றே கூற வேண்டும். மேலும் ஒரு வெற்றிலையில் சிறிது விபூதியை வைத்துவிட்டு “அடுத்தவர் வாங்க” என்று கூறுகின்றார்.
பல மைல்களுக்கு அப்பால் இருந்து பலமான நம்பிக்கைகளுடன் முன்னேஸ்வரம் நோக்கி வரும் நபர்களுக்கு இவ்வாறான நடவடிக்கைகளால் நம்பிக்கை இழந்து செல்கிறது என்றே கூற வேண்டும். மேலும் இன்று இந்து மதம் இழிவாக பேசப்படுவதற்கும்‚ இந்துக்கள் மதம் மாறுவதற்கும் பல்வேறு காரணிகளில் இதுவும் ஒன்று என்றே கூற வேண்டும். இவ்வாறு பணம் பறிக்கும் ஒரு இடமாகவே இன்று முன்னேஸ்வரம் மாறியுள்ளது.
நான் எண்ணிச் சென்ற காரணி நிறைவேறாத கவலையில் எனது நண்பன் ஒருவனிடம் இந்த சம்பவத்தைக் கூறியபோது “நீ ஏன் அங்கு சென்றாய். சலூன் ஒன்றுக்கு சென்றிருந்தால் உனக்கு நூறு ரூபர மட்டுமே செலவாகி இருக்கும். அத்தோடு மனதிற்கும் ஆறுதலாக இருந்திருக்கும் “என்று கூறியதில் ஒருவித உண்மை உள்ளது என்றே எண்ணத் தோன்றுகின்றது.

மணிமாறன்
வாயஅடைளச6ை;பஅயடை.உழஅ