தமிழ், Democracy, Governance

வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு இங்கே!

வரவு – செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பு 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. அரசு வெற்றிபெறும் என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டேர புள்ளே மார் தட்டுகிறார். அரசை தோற்கடித்தே தீருவோம் என்று ஐ.தே.கட்சி சவால் விடுகின்றது.

இந்த நிலையில் வரவு – செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் அமைச்சர் சந்திரசேகரன் மலேஷியர செல்கின்றார். பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்ற நிலைதான் இது என பலரும் விமர்சிக்கின்றனர். ஐ.தே.கட்சியையும் அரசையும் குறிப்பாக தமிழ் மக்களையும் பகைத்துக்கொள்ளாமலிருக்க இதுதான் வழயென அமைச்சர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். கடந்த முதலாம் இரண்டாம் திகதிகளில் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் தமிழ் இளைஞர்கள் வகைதொகையின்றி கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்தொகையானோர் மலையகத்தைச் சேர்ந்தவர்களாவர். இந்தக் கைது தொடர்பாக மலையக மக்கள் முன்னணி பெரிதாக அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் தமது அமைச்சுப் பதவி பறிபோய்விடலாமென மலையக மக்கள் முன்னணி அமைச்சர்கள் நினைத்திருக்கலாம்.

ஏதேர கழுவிய மீன்களில் நழுவிய மீன்போல் செயற்படாமல் மலையக அரசியல்வாதிகள் தமக்கு வாக்களித்த மக்களின் நலன்கருதிச் செயற்பட உறுதி பூணவேண்டும்.

சியாமளர