தமிழ், Human Rights, Human Security, Peace and reconciliation

தனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை‚ 2008ஐ ‘சர்வதேச மொழிகள் ஆண்டு’ என்று பிரகடனப்படுத்தியுள்ளது. இதனை கொண்டாடுவதற்கு எல்லர மொழிகளையும் பாதுகாக்கவும் விருத்தி செய்யவும் முன்வருமாறு எல்லர அரசாங்கங்கள்‚ ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் அமைப்புகள்‚ சிவில் சமூக அமைப்புகள்‚ கல்வி நிறுவனங்கள்‚ துறைசார் நிபுணர்களின் சங்கங்கள்‚ மற்றும் அனைத்து பங்குதாரர்களையும் யுநெஸ்கேர நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையை பொருத்தவரை சிங்களம்‚ தமிழ்‚ ஆங்கிலம் எனும் மூன்று மொழிகள் பிரதானமாக உள்ளன.

இலங்கை சுதந்திரம் அடைந்து 60 வருடங்கள் கடந்ததுவிட்டது. இந்த 60 வருடங்களில் அரைவாசியான 30 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட மாட்டாமல் உள்ளது. இலங்கை சுதந்திரம் அடைந்து பின்னர் இடம்பெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகளில் 1956ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டம் தனியிடம் பெறும் ஒரு நிகழ்வாகும். இன்று இலங்கை முகம் கொடுத்துள்ள போருக்கும் சிங்களம் மட்டும் சட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என வாதம் புரிகின்ற தரப்புகள் இருக்கின்றன. யார் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் சிங்களம் மட்டும் சட்டமானது இலங்கையின் இன்றைய நிலைமைக்கு பாரிய அளவில் காரணமாய் அமைந்தது என்பதுதான் யதார்த்தம்.

ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறப்பினராய் இருந்த சிறில் ஈ. எஸ். பெரேரர 1956ல் சிங்களம் மட்டும் சட்டம் தொடர்பில் எழுதிய கட்டுரையில் ‘எனது பார்வையில் இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு சிங்களம் மட்டும் சட்டம் மிகவும் கேடானதாகக அமைந்துள்ளது. இது சிங்கள மக்களினால் மிகச்சிறந்த வெற்றியாக வரவேற்கப்பட்ட போதும்‚ இதுவே தோற்கடிக்கப்படுவதற்கு சாதகமாக மற்றும் ஆரம்பமாக அமைந்துள்ளது. இச்சட்டமானது இலங்கை சட்டப் புத்தகத்தில் இருக்கும் வரையில்‚ இது சிங்கள மக்கள் மீதான பகிரங்க குற்றச்சாட்டாக இருப்பதுடன்‚ அது குற்றச்சாட்டாக மட்டும் இருக்காது. தமிழர்கள் தமக்கு நியாயமானது என கருதும் எந்த முறையிலேனும் தம்மை தாமே பாதுகாத்துக் கொள்ளுவதற்கான ஒரு பகிரங்க அழைப்பாக அமையப் போகிறது’ என்று குறிப்பிடடுள்ளார்.

2002 நவம்பரில் இலங்கைத் தமிழர்களை உருவாக்குதல் (வுாந ஆயமபைெ ழக வாந ளுசடையமெய ெவுயஅடைள) என்ற தனது கட்டுரையில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள்‚ சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டதன் காரணமாக‚ வகுப்பு பிரதேசம் என்ற பேதம் கடந்து அனைத்து இலங்கைத் தமிழர் மத்தியிலும் பாதுகாப்பு நுட்பம்ஃ பொறிமுறை எழுச்சி பெற்றது என்று குறிப்பிடுகிறார்.

இலங்கையின் முதலாவது பாராளுமன்றம் 1947ல் அமைக்கப்பட்டது. 1948ல் இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் இலங்கையின் முதலாவது பொதுத் தேர்தல் 1952ல் நடைபெற்றது. 1956 ஏப்ரில் மாதம் நடந்த இரண்டாவது பொதுத்தேர்தலில் பண்டாரநாயக்கர தலைமையிலான ஸ்ரீ லங்கர சுதந்திரக் கட்சி‚ சிங்களம் மட்டும் கொள்கையை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கொண்டிருந்து வெற்றி பெற்ற‚ பண்டாரநாயக்கர பிரதமரானார். 1956ம் ஆண்டு ஜுன் 15ம் திகதி சிங்களம் மட்டும் கொள்கை சட்டமாக இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக சிங்களம் ஏற்றுக்கொள்ளப்பட்டு‚ அமுல்படுத்தப்பட்டது.

22 வருடங்களின் பின்னர் 1978ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பில் உத்தியோகபூர்வ மொழி சிங்களம் என்றும் தேசிய பொழி சிங்களம் மற்றும் தமிழ் என்றும் திருத்தம் செய்யப்பட்டது. 9 வருடங்களின் பின்னர் 1987ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தில்‚ உத்தியோகபூர்வ மொழியாக சிங்களம் இருக்கும் என்றும்‚ தமிழும் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கும் என்றும் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

அண்மையில் ஹட்டன் நகரில்‚ அரசியலமைப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாடுகளுக்கான அமைச்சின் தேசிய ஒருமைப்பாட்டு செயற்திட்டத்தின் கீழ் நடாத்தப்பட்ட பொழிபெயர்ப்பாளர் – உரைபெயர்ப்பாளர் பயிற்சி நெறியை முடித்துக்கொண்ட மாணவர்கள் மத்தியில் பேசும் போது அரசியலமைப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாடுகளுக்கான அமைச்சர் டியூ குணசேகர‚
அனைவருக்குமான மொழி உரிமையானது இலங்கையின் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும் அரச நிறுவனங்களில் பொழிபெயர்ப்பு விடயங்களில் தமிழ் பேசும் சிறுபான்மையினர் பல கஷ்டங்களுக்கு முகம் கொடுப்பது தொடர்வதாக தெரிவித்தார்.

தமிழ் இலங்கையின் தேசிய மொழி‚ என்று சட்டமாக்கப்பட்டு 30 வருடங்களும்‚ தமிழ் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழி என்று சட்டமாக்கப்பட்டு 20 வருடங்களும் கடந்தாகிவிட்டது. இலங்கை பாராளுமன்றத்தில் 20‚ 30 வருடங்களுக்கு முன் சட்டமாக்கப்பட்ட விடயம் பற்றியதே அரசியலமைப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாடுகளுக்கான அமைச்சர் டியூ குணசேகரவின மேற்படி கூற்று. அமைச்சர் மேலோட்டமாக பொழிபெயர்ப்பு விடயங்களில் தமிழ் பேசும் சிறுபான்மையினர் பல கஷ்டங்களுக்கு முகம் கொடுப்பதாக கூறினாலும் ஆழமாக நோக்கினால் இது தேசிய பிரச்சினை என்பதை மறுப்பதற்கில்லை.

1987ம் ஆண்டில் இருந்து 2008 வரை ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கர சுதந்திரக் கட்சியும் பத்து பத்து வருடங்கள் ஆட்சி பொறுப்பில் இருந்துள்ளன. 1978 மற்றும் 1987 ல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலேயே தமிழ்‚ தேசிய மொழி மற்றும் உத்தியோகபூர்வ மொழி என்று சட்டமாக்கப்பட்டது. இருந்தாலும் 1978ல் இருந்து பார்த்தால் ஐக்கிய தேசியக் கட்சி இருபது வருடங்கள் ஆட்சிப் பொருப்பில் இருந்துள்ளது.

இதன்படி‚ 1956ல் நிறைவேற்றப்பட்ட சிங்களம் மட்டும் சட்டத்தை அமுல் படுத்துவதற்கு காட்டிய அக்கரை‚ ஆர்வம்‚ ஈடுபாடு‚ அவசரம் என்பவற்றில்‚ எத்தனை சதவீதம் 1978‚ 1987 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தமிழ் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்திற்கு காட்டப்பட்டது என்ற கேள்விக்கு கண்ணியமான பதில் தரும் அறுகதை இலங்கையை ஆட்சி செய்த இரு பெரிய கட்சிகளுக்கும் கிடையாது.

இந்த இடத்தில்‚ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின்படி தேசிய பிரச்சினைக்கு தீர்வு யோசனைகளை கண்டரியும் நோக்கில் அமைக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழு‚ 1987ல் கொண்டுவரப்பட்ட 13ம் திருத்தச்சட்டத்தை தழுவியதாக தனது யோசனைகளை முன்வைத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும்‚ மக்கள் விடுதலை முன்னணியும் தவிர்ந்த தென் இலங்கையின் 14 அரசியல் கட்சிகள் ஒன்றரை வருட காலத்தில் 63 தடவைகள் ஒன்று கூடி முன்வைத்த இந்த யோசனைகளை ஐக்கிய தேசியக் கட்சி‚ 1987ல் தாம் கொண்டுவந்த 13வது திருத்தச்சட்டம் என்று சொந்தம் கொண்டாடுகிறது. மக்கள் விடுதலை முன்னணி யோசனைகளை ஏற்றுக்கொள்ளவே மறுக்கிறது. தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக ஏற்கனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கே இந்த நிலைமை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதைத்தவிர‚ அண்மையில் ஜாதிக ஹெல உருமயவின் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க‚ தமிழர்களுக்கு விசேட அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்போவதாகவும் இந்த யோசனையை பாராளுமன்றத்தி்ல் முன்வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். வெறும் கற்பனைக்கு‚ ஒருவேளை மேற்படி விவகாரம் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டால்‚ மிகுந்த அக்கரையோடும்‚ ஆர்வத்தோடும்‚ ஈடுபாட்டோடும்‚ அவசரமாகவும் நடைமுறைப்படுத்தப்படும் என்று சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு தமிழர்களுக்கு விசேட அடையாள அட்டை வழங்கும் யோசனைக்கு பாதுகாப்பு விவகாரமே காரணம் என்றும் இதன் மூலம் பயங்கரவாதிகளில் இருந்து அப்பாவி தமிழ் மக்களை வேறுபடுத்தி அடையாளம் காணக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இதன் மூலம் ‘பொதுவாக தமிழர்கள் முகம் கொடுக்கும் தேவையற்ற துன்புறுத்தல்கள் அல்லது புண்படுத்தல்கள் (ாயசயளளஅநவெள) முடிவுக்கு கொண்டுவரக் கூடியதாக அமையும்’ என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் இரண்டு விடயங்கள் குறித்துக்கொள்ளப்பட வேண்டும். ஒன்று‚ அண்மைக்காலமாக தென் இலங்கையில் புலிகள் என்று சிங்களவர்களும் கைது செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு என்ன அடையாள அட்டை வழங்குவது? இரண்டாவது‚ பொதுவாக தமிழர்கள் துன்புறுத்தல்கள்ஃ புண்படுத்தல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை ஜாதிக ஹெல உருமய போன்ற கடும் போக்குவாத கட்சியே ஒத்துக்கொண்டுள்ளது. இந்த ஒப்புதல் வாக்குமூலம் தரப்படுவதற்கு சிறிய கோடு – பெரிய கோடு தத்துவம் செல்வாக்கு செலுத்தியுள்ளது. அதாவது‚ தமிழர்களுக்கு தனியான அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்பதை நியாயப்படுத்த ‘பொதுவாக தமிழர்கள் துன்புறுத்தல்கள்ஃ புண்படுத்தல்களுக்கு ஆளாகிறார்கள்’ என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

‘பொதுவாக தமிழர்கள் துன்புறுத்தல்கள்ஃ புண்படுத்தல்களுக்கு ஆளாகிறார்கள்’ என்பது மட்டுமல்ல தமிழை புண்படுத்த முயற்சிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் உத்திகோகபூர்வ மொழி‚ தேசிய மொழி அந்தஸ்த்து வழங்கப்படாமை தமிழுக்கு ஒன்றும் குறை இல்லை. 20‚ 30 வருடங்களுக்கு முன் மேன்மைதங்கிய பாராளுமன்றத்தால் உத்தியோகபூர்வ மொழி‚ தேசிய மொழி என்று சட்டமாக்கப்பட்ட மொழியை பாராளுமன்றத்தால் முடிவுசெய்யப்பட்ட வகையில் நடைமுறைப்படுத்தாமை பாராளுமன்றத்திற்கே கறை.

‘தகஹயஷ கதஷத்கஷ நற்ஹஇயஜஹலஹஷக் மஇகர்ஷர்’ என்ன இது? இலங்கையின் 60வது சுதந்திர தினத்தை ஒட்டி சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த ‘தேசத்தின் மகுடம்’ கண்காட்சியில் தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சினால் அமைக்கப்பட்டிருந்த காட்சியறையின் முகப்பில் தொங்கவிடப்பட்டிருந்த பெயர்ப்பலகையில் இருந்த எழுத்துக்களே இவை. முக்கியமாக அரசதுறையில் தமிழ் மொழியில் அங்காங்கு ஏதேனும் எழுதப்படும் போது பெரும்பாலும் எழுத்துப் பிழைகளுடனேயே எழுதப்படுகிறது. ‘தனது மூக்கு சீவி எதிரிக்கு சகுனம் பிழைக்க வைக்க முயலும் துஷ்ட மனோநிலையாகவே இதனை கொள்ள வேண்டியுள்ளது. மீனவர்களோடு சினத்துக்கொண்டவன் கடலில் சிறுநீர் கழித்தால் சமுத்திரத்திற்கு என்ன ஆகப்போகிறது? ஏதேர ஒரு சந்தர்ப்பத்தில் கவிஞர் வாலி எழுதியுள்ளது ஞாபகத்திற்கு வருகிறது. ‘ஹெலிகாப்டர் காற்றாடி சுற்றி ஆகாய நிலர அணைந்து விடுமர என்ன?’

மாரிமுத்து கிருஷ்ணமூர்த்தி.

22.02.2008